பொல்கஹவெல புகையிரத விபத்து; சாரதி உள்ளிட்ட நால்வர் பணி நீக்கம் | தினகரன்

பொல்கஹவெல புகையிரத விபத்து; சாரதி உள்ளிட்ட நால்வர் பணி நீக்கம்

Video: Sauru Sampath

நேற்று (07) பொல்கஹவெல, பனலிய பிரதேசத்தில் இடம்பெற்ற புகையிரத விபத்து தொடர்பில் நால்வர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

பொல்கஹவெல புகையிரத விபத்து; சாரதி உள்ளிட்ட நால்வர் பணி நீக்கம்-Polgahawela Train Accident-Driver & 3 Others Interdicted

தரித்து நின்ற புகையிரதத்துடன் மோதிய ரம்புக்கணை புகையிரதத்தின் சாரதி, சாரதி உதவியாளர், காவலர், துணைக் காவலர் ஆகியோரே இவ்வாறு தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பொல்கஹவெல புகையிரத விபத்து; சாரதி உள்ளிட்ட நால்வர் பணி நீக்கம்-Polgahawela Train Accident-Driver & 3 Others Interdicted

நேற்று (06) பிற்பகல் இடம்பெற்ற குறித்த விபத்தின்போது, கொழும்பிலிருந்து கண்டி நோக்கி பயணித்த புகையிரதமானது கோளாறு காரணமாக பொல்கஹவெல புகையிரத நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், கொழும்பிலிருந்து ரம்புக்கணை நோக்கி பயணித்த புகையிரதம் அதன் பின்புறமாக மோதி விபத்துக்குள்ளாகியமை குறிப்பிடத்தக்கது.

பொல்கஹவெல புகையிரத விபத்து; சாரதி உள்ளிட்ட நால்வர் பணி நீக்கம்-Polgahawela Train Accident-Driver & 3 Others Interdicted

குறித்த விபத்தில் காயமடைந்த 32 பேர், பொல்கஹவெல, குருணாகல், ரம்புக்கணை, கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

பொல்கஹவெல புகையிரத விபத்து; சாரதி உள்ளிட்ட நால்வர் பணி நீக்கம்-Polgahawela Train Accident-Driver & 3 Others Interdicted

Add new comment

Or log in with...