ஹோட்டலில் சுகவீனமுற்ற நான்காமவரும் பலி | தினகரன்

ஹோட்டலில் சுகவீனமுற்ற நான்காமவரும் பலி

ஹோட்டலில் சுகவீனமுற்ற நான்காமவரும் பலி-Wadduwa Hotel Incident 4th Person Die

 

வாத்துவ கடற்கரை பிரதேசத்திலுள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற கொண்டாட்ட நிகழ்வின்போது திடீர் சுகவீனமுற்று வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நான்காவது நபரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஹோகந்தர பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதான இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என, பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமை (04) இரவு தனியார் நிறுவனம் ஒன்றினால் குறித்த ஹோட்டலில் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வொன்றில் கலந்துகொண்டவர்களில் நால்வர் திடீரென சுகவீனமுற்ற நிலையில் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

அதிக காய்ச்சல், மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகளை அடுத்து குறித்த நால்வரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நால்வரில் கெஸ்பேவ பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதான நபர் ஒருவரும் திவுலபிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய நபர் ஒருவரும், வாத்துவை, மொரந்துடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதான நபரும் நேற்றைய தினம் (05) சிகிச்சை பலனின்றி மரணமடைந்தனர்.

சடலம் தற்போது பாணந்துறை வைத்தியசாலையின் பிரேத அறையில்  வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொலிசார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்.

 


Add new comment

Or log in with...