Thursday, March 28, 2024
Home » நவீன தொழில்நுட்பத்தில் சாரதி அனுமதிப் பத்திரங்கள்

நவீன தொழில்நுட்பத்தில் சாரதி அனுமதிப் பத்திரங்கள்

by sachintha
November 23, 2023 8:25 am 0 comment

வேலைத்திட்டம் தயாரென்கிறார் அமைச்சர்

நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் (21) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலே, அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் எதிர்காலத்தில் மோசடி மற்றும் ஊழலைத் தடுக்கும் வகையில், இ – மோட்டரிங் திட்டத்தின் கீழ் மோட்டார் வாகன போக்குவரத்துத்துத் திணைக்களம் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தேவையான அனுமதியை நீதிபதிகள் வழங்குவார்களென நம்புவதாகவும் அமைச்சர் கூறினார். அத்துடன், 10,000 க்கும் மேற்பட்ட சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படவுள்ள தாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT