கோளாறினால் நிறுத்தியிருந்த புகையிரதத்துடன் மற்றொரு புகையிரதம் மோதி விபத்து | தினகரன்


கோளாறினால் நிறுத்தியிருந்த புகையிரதத்துடன் மற்றொரு புகையிரதம் மோதி விபத்து

32 பேர் காயம்

பொல்கஹவெல புகையிரத நிலையம் அருகே பனலிய பகுதியில் இரண்டு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 32 பேர் காயமடைந்துள்ளனர்.

கொழும்பிலிருந்து கண்டி நோக்கி பயணித்த புகையிரதமானது கோளாறு காரணமாக பொல்கஹவெல புகையிரத நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், கொழும்பிலிருந்து பிற்பகல் 4.50 மணிக்கு ரம்புக்கணை நோக்கி பயணித்த புகையிரதம் குறித்த புகையிரதம் மீது அதன் பின்புறமாக மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக, புகையிரத பாதுகாப்பு கண்காணிப்பாளர் அநுர பிரேமரத்ன தெரிவித்தார்.

இதேவேளை, கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி பயணிக்க இருந்த இரவு நேர அஞ்சல் புகையிரத சேவை, குறித்த விபத்து காரணமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

குறித்த விபத்தில், பாரிய காயங்களுக்குள்ளான, ஐந்து பேர் பொல்கஹவெல வைத்தியசாலையிலிருந்து, குருணாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 


Add new comment

Or log in with...