புறக்கோட்டை மெலிபன் வீதியில் தீ; உயிர்ச் சேதம் இல்லை | தினகரன்

புறக்கோட்டை மெலிபன் வீதியில் தீ; உயிர்ச் சேதம் இல்லை

புறக்கோட்டை மெலிபன் வீதி தீ; உயிர்ச் சேதம் இல்லை-Pettah Maliban Street Fire-No any injury reported

 

புறக்கோட்டை, மெலிபன் வீதியிலுள்ள கடையொன்றில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இன்று (06) அதிகாலை 5.00 மணியளவில், புறக்கோட்டை, மெலிபன் வீதியிலுள்ள 4 மாடிக் கட்டடம் ஒன்றின், கீழ்த்தளத்தில் உள்ள சிறிய அறையொன்றிலேயே குறித்த தீ பரவியதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

புறக்கோட்டை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய உடனடியாக செயற்பட்ட பொலிசார், கொழும்பு மாநகர தீயணைப்பு பிரிவு மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன் தீயை முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக அவர் தெரிவித்தார்.

குறித்த சிறிய அறையில் மேற்கொண்டு சென்ற பை (Bag) கடையொன்றினுள்ளேயே, திடீரென தீ பரவியுள்ளது.

தீயினால் குறித்த வர்த்தக நிலையத்தில் இருந்த பொருட்கள் தீக்கிரையாகியுள்ளதாகவும், இச்சம்பவத்தில் உயிராபத்து எதுவும் ஏற்படவில்லை எனவும் ருவன் குணசேகர தெரிவித்தார்.

தீ ஏற்பட்டதற்கான காரணம் இது வரை கண்டறியப்படாத நிலையில், புறக்கோட்டை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

 


Add new comment

Or log in with...