மினுவாங்கொடையில் துப்பாக்கிச்சூடு; 68 வயது நபர் பலி | தினகரன்

மினுவாங்கொடையில் துப்பாக்கிச்சூடு; 68 வயது நபர் பலி

மினுவாங்கொடையில் துப்பாக்கிச்சூடு; 68 வயது நபர் பலி-Minuwangoda Shooting-68 Yr Old Dead

 

மினுவாங்கொடை,  யட்டியன சந்தி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

இன்று (05) முற்பகல் 11.10 மணியளவில், மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் இருவரில் ஒருவர் இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இச்சம்பவத்தில், 68 வயதான, மினுவாங்கொடை, கமன்கெதரவைச் சேர்ந்த விஜேமுனி ஜஸ்டின் ரத்னசீல சில்வா என்பவர், மினுவாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார்.

குறித்த நபரின் சடலம், மினுவாங்கொடை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, மினுவாங்கொடை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

 


Add new comment

Or log in with...