கோப்பாய் விபத்தில் நகைக்கடை உரிமையாளர் ஸ்தலத்திலேயே பலி | தினகரன்


கோப்பாய் விபத்தில் நகைக்கடை உரிமையாளர் ஸ்தலத்திலேயே பலி

கோப்பாய் விபத்தில் நகைக்கடை உரிமையாளர் ஸதலத்திலேயே பலி-Jaffna Kopay Accident-Father Dead on the spot-Daughter Injured

 

உடன் சென்ற 18 வயது மகள் பலத்த காயமுற்று யாழ் போதனாவில் அனுமதி

யாழ்ப்பாணம் கோப்பாய் வீதியில் இடம்பெற்ற விபத்தில் நகைக் கடை உரிமையாளர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

இன்று (06) பிற்பகல் நகைக்கடை உரிமையாளரான ரஞ்சன் (45) தனது மகளுடன் மோட்டார் சைக்கிளில் கோப்பாயிலிருந்து கைதடி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேளையில் பின்னால் வந்த தண்ணீர் பவுசரில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.

அவருடன் பயணித்த 18 வயதுடைய அவரது மகள் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

(யாழ்ப்பாணம் குறூப் நிருபர் - சுமித்தி தங்கராசா)

 


Add new comment

Or log in with...