Thursday, March 28, 2024
Home » 3,190 கி.மீ தூரத்தை நடந்து உலக சாதனை: பாலகுமாருக்கு வாழ்த்து

3,190 கி.மீ தூரத்தை நடந்து உலக சாதனை: பாலகுமாருக்கு வாழ்த்து

by sachintha
November 23, 2023 6:22 am 0 comment

கொழும்பில் மலையக கல்வி அபிவிருத்தி மன்றம் வரவேற்பு

அகுரஸ்ஸ, மாத்தறை, பரதுவ தேயிலை தோட்டத்தில் தோட்ட தொழிலாளியாகப் பணியாற்றும் பாலகுமார் சுப்பிரமணியம் (வயது 50) நடைபவனியாக உலக சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அகுரஸ்ஸ மாத்தறையிலிருந்து 3,190 கி.மீ தூரத்தை கால்நடையாக கடப்பதற்காக கடந்த செப்டம்பர் மாதம் 25 இல், இவர் புறப்பட்டார்.

ஹம்பாந்தோட்டை, மொனராகலை, அம்பாறை , மட்டக்களப்பு, வவுனியா, யாழ்ப்பாணம் வழியாக நடந்து நேற்று இவர், கொழும்பை வந்தடைந்தார்.

இவரை கொழும்பு செட்டியார் தெருவில் மலைய கல்வி அபிவிருத்தி மன்ற உறுப்பினர்கள் வரவேற்றனர்.இவரை பாராட்டி கௌரவித்து பொன்னாடை போர்த்தப்பட்டது. அத்துடன் அவருக்கு உதவிகளும் வழங்கப்பட்டன.

அவர் இன்று காலிமுகத்திடலிலிருந்து புறப்பட்டு களுத்துறை சென்றடைவார். அத்துடன் அடுத்த 05 நாட்களுக்குள் மாத்தறை, அக்குரசவை அடைந்ததும் அவரது நடைபவனி சாதனை முடிவடையும்.

உலக சாதனை கின்னஸ் புததகத்தில் பதிவிடுவதற்காக இவர் நடைபவனி செல்லும் ஒவ்வொரு இடத்திலும் பொலிஸ் அதிகாரிகள் பரிசிலித்து கையொப்பமிட்டுள்ளனர்.

இலங்கையில் கடந்த காலத்தில் 1987 கி மீட்டர் துாரம் நடந்த சாதனையே உள்ளது. தனகு குடும்பம் சுனாமியால் இறந்து போயினர்.இந்நிலையில், தனிமையிலேயே வாழ்வதகாவும் தனக்கு குடியிருக்க வீடொன்றை நிர்மாணிக்க வேண்டும் எனவும் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார் .

 

தெஹிவளை, கல்கிஸ்ச விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT