யானை தாக்கி 8 பிள்ளைகளின் தந்தை பலி | தினகரன்

யானை தாக்கி 8 பிள்ளைகளின் தந்தை பலி

யானை தாக்கி 8 பிள்ளைகளின் தந்தை பலி-Elephant Attacked Batticaloa-Nellore

 

மீன்பிடித்துவிட்டு வீடு திரும்பியபோது சம்பவம்

வன விலங்கு பாதுகாப்பு அதிகாரிகளினால் விரட்டப்பட்ட காட்டு யானை குடியிருப்புப் பிரதேசத்திற்குள் நுழைந்து தாக்கியதில் மீனவர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு நெல்லூர் பிரதேசத்தில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் 08 பிள்ளைகளின் தந்தையான 53 வயதுடைய மாமங்கம் சண்முகராசா என்பவரே பலியானதாக ஆயித்தியமலை பொலிஸார் தெரிவித்தனர்.

காட்டு யானைகள் கிராமத்திற்குள் நுழைய முற்படுவதாக  வன விலங்கு பாதுகாப்பு அதிகரிகளுக்குத் தெரிவிக்கப்பட்ட முறைப்பாட்டினை அடுத்து வன விலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் அந்த யானைகளை வெடி வைத்து விரட்டியபோது  சில யானைகள் மக்கள் குடியிருப்புப் பிரதேசத்திற்குள் நுழைந்ததில் இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீட்டுவாசலில் நின்ற குறித்த நபரே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகியதாக தெரிவிக்கப்படுகிறது.

மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள இந்நபர் மீன்பிடிக்கச்எசென்று வீடு திரும்பிய நிலையிலேயே யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யானை தாக்கி 8 பிள்ளைகளின் தந்தை பலி-Elephant Attacked Batticaloa-Nellore

திடீர் மரணவிசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.  நஸீர் மரண விசாரணைகளை நடாத்தினார்.

குறிந்த நபரின் சடலம் வன பாதுகாப்பு அதிகாரிகளது வாகனத்தின்மூலம் செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதையடுத்து டாக்டர் கே. சுகுமார்  உடற்கூறு பரிசோதனையை மேற்கொண்டார்.

விலா என்புகள் உடைந்து இதயம் சிதையவடைந்ததனால்  மரணம் சம்பவித்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர் பிரேதம் நல்லடக்கத்திற்காக குடும்ப உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.    

(ஏறாவூர் குறூப் நிருபர் - நசீர் மொஹமட் கெளஸ்)

 


Add new comment

Or log in with...