மீனவர்கள் போராட்டம்; முல்லைத்தீவு அலுவலகம் மீது தாக்குதல் | தினகரன்

மீனவர்கள் போராட்டம்; முல்லைத்தீவு அலுவலகம் மீது தாக்குதல்

மீனவர்கள் போராட்டம்; முல்லைத்தீவு அலுவலகம் மீது தாக்குதல்-Fisherman Protest-Mullaitivu Department of Fisheries and Aquatic Resources Attacked

முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களத்தின் முன்பாக மீனவர்கள் முன்னெடுத்து வரும் போராட்டத்தினை அடுத்து குறித்த அலுவலகத்தின் பணிகள் முடக்கப்பட்டுள்ளதுடன், அலுவலகத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழஙகப்பட்டுள்ளது.

மீனவர்கள் போராட்டம்; முல்லைத்தீவு அலுவலகம் மீது தாக்குதல்-Fisherman Protest-Mullaitivu Department of Fisheries and Aquatic Resources Attacked

முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சட்டவிரோதத் தொழில் முறைகளையும் தடைசெய்யப்பட்ட தொழில்களையும் தடுத்து நிறுத்தக்கோரி முல்லைத்தீவு மீனவர்கள் நேற்று முன்தினம் கவனயீர்பபுப்போராட்டம் ஒன்றை முன்னெடுத்ததுடன், நேற்று (02) முதல் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், இரண்டாவது நாளாக இன்றும் (03) கவனயீர்ப்புப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மீனவர்கள் போராட்டம்; முல்லைத்தீவு அலுவலகம் மீது தாக்குதல்-Fisherman Protest-Mullaitivu Department of Fisheries and Aquatic Resources Attacked

சட்டவிரோத மற்றும் அனுமதியற்ற தொழில்களால் 5,160 மீனவர்களினுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் இவ்வாறான தொழில்களைதடை செய்யக்கோரியே இவர்கள் நேற்று முன்தினம் (01) முதல் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மீனவர்கள் போராட்டம்; முல்லைத்தீவு அலுவலகம் மீது தாக்குதல்-Fisherman Protest-Mullaitivu Department of Fisheries and Aquatic Resources Attacked

குறித்த ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து குறித்த பகுதியில ஒரு பதற்றமான சூழல் ஏற்பட்டதுடன், ஆத்திரமுற்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் அலுவலகததிற்கும் சேதம் விளைவித்தனர்.

இதனையடுத்து நேற்று (02) முதல் கடற்தொழில் நீரியல் வளத் திணைக்கள அலுவலக நடவடிக்கைகள் முற்றாக முடங்கியதுடன், இன்று (03) அலுவலகத்திற்கு முழுமையான பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

மாவை சேனாதிராஜா உறுதிமொழி
இதேவேளை, தடைசெய்யப்பட்ட தொழில்களை தடுத்து நிறுத்தி பாதிக்கப்பட்ட மினவர்களின் வாழ்வாதாரத் தொழில்களை அவர்கள் சரியாக முன்னெடுப்பதற்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் பாரளுமன்ற உறுப்பினர் சாந்திசிறிஸ்கந்தராஜா ஆகியோர இன்று பிற்பகல் ஒரு மணியளவில் சந்தித்துக்கலநதுரையாடியுள்ளனர்.

மீனவர்கள் போராட்டம்; முல்லைத்தீவு அலுவலகம் மீது தாக்குதல்-Fisherman Protest-Mullaitivu Department of Fisheries and Aquatic Resources Attacked

இக்கலநதுரையாடலில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அவர்கள் தொடரந்து கருத்துததெரிவிக்கையில், தடைசெய்யப்பட்ட சுருக்குவலை மற்றும் சிலிண்டர் வைத்து மீன்பிடிப்பது மின்சாரம் பாவித்து மீன்பிடித்தல் டைனமற் பாவித்தல் போன்ற அனுமதிக்கப்படாத முறையில் சட்டவிரோதத்தொழில் மேறகொள்ளப்படுவதற்கு இந்த மீனவர்கள் எதிர்ப்புத்தெரிவித்திருக்கின்றார்கள்.

மீனவர்கள் போராட்டம்; முல்லைத்தீவு அலுவலகம் மீது தாக்குதல்-Fisherman Protest-Mullaitivu Department of Fisheries and Aquatic Resources Attacked

இந்த கடற்தொழிலாளர்கள் இப்போது மட்டுமல்ல போர்காலத்திலும், ஆழிப்பேரலை அனர்தத்திலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள்.

இபபோது இவ்வாறான சட்டவிரோதத்தொழில்களால் இவர்களது தொழில் பாதிக்கப்படடிருக்கின்றது,

இதனால் அவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

அதைவிட போர்காலத்தில் கூட இராணுவ நடவடிக்கைகளாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற கடறதொழிலாளர்களுடன் இன்று மேற்கொண்ட கலந்துரையாடலில் அவர்கள், தடைசெய்யப்பட்ட தொழில்முறைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதை முற்றுமுழுதாக தடைசெய்யவேண்டுமு என்று அவர்கள் எங்களிடம் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்கள்.

மீனவர்கள் போராட்டம்; முல்லைத்தீவு அலுவலகம் மீது தாக்குதல்-Fisherman Protest-Mullaitivu Department of Fisheries and Aquatic Resources Attacked

இச்சந்திப்பில் கலந்து கொண்டிருந்தபோது, கடற்தொழில் நீரியல் வளங்கள் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் விஜித் விஜித முனி சொய்சா  அவர்களுடன் நான் தொடர்புகொண்டேன் அப்போது அவர் இந்த வியடம் பற்றி அறிந்திருப்பதாகவும் எதிர்வரும் எட்டாம் திகதி தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர்கள் மீனவர் சங்கப்பிரதிநிதிகளுடன் கலந்துரையாடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை எதிர்வரும் 12ம்திகதி முல்லைத்தீவில் மீனவர்களுடன பேசுவதற்காகவும் இங்குள்ள நிலமைகள் தொடர்பில் அறிவதற்காகவும் தான் இங்கு வரவுள்ளதாகவும் இந்தப்பிரச்சனைகளைத்தீருப்பதற்கு தான்னாலான முழு முயற்சிகளை எடுப்பதாகவும எனக்குத்தெரியப்படுத்தியிருக்கின்றார்.

தடைசெய்யப்பட்ட தொழில்களை தடுத்து நிறுததி பாதிக்கப்பட்ட மினவர்களின் வாழ்வாதாரத்தொழில்களை அவர்கள் முன்னெடுப்பதற்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்துள்ளார்.

(பரந்தன் குறூப்நிருபர் - யது பாஸ்கரன்)

Add new comment

Or log in with...