மிதக்கும் சந்தைக்கு அருகில் போதைப்பொருளுடன் இந்தியர் கைது | தினகரன்

மிதக்கும் சந்தைக்கு அருகில் போதைப்பொருளுடன் இந்தியர் கைது

மிதக்கும் சந்தைக்கு அருகில் போதைப்பொருளுடன் இந்தியர் கைது-Ice Drug Worth Rs. 1 Crore Seized-An Indian Arrested

 

புறக்கோட்டை, மிதக்கும் சந்தைக்கு அருகில் ஐஸ் எனும் போதைப்பொருளுடன் இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (02) பிற்பகல் 4.40 மணியளவில், பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய, பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இதன்போது குறித்த நபரிடமிருந்து, ஐஸ் (Methamphetamine) எனப்படும் 878 கிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது சுமார் ரூபா 1 கோடி பெறுமதியைக் கொண்டது என தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபரை இன்று (03) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

 


Add new comment

Or log in with...