விளையாடிக்கொண்டிருந்த 13 வயது சிறுவன் கயிறு இறுகி பலி! | தினகரன்

விளையாடிக்கொண்டிருந்த 13 வயது சிறுவன் கயிறு இறுகி பலி!

விளையாடிக்கொண்டிருந்த 13 வயது சிறுவன் கயிறு இறுகி பலி-13Yr Old Dead While Playing

கிளிநொச்சி முழங்காவில் அன்புபுரம் பிரதேசத்தில் 13 வயது சிறுவன் ஒருவன் கயிறு இறுகி பலியாகியுள்ளார்.

விளையாடிக்கொண்டிருந்த 13 வயது சிறுவன் கயிறு இறுகி பலி-13Yr Old Dead While Playing

குறித்த பகுதியில் உள்ள 3 பெண் சகோதரிகளிற்கு மூத்த பிள்ளையான குறித்த சிறுவன் பாடசாலை முடித்து வீடு திரும்பி இரு தங்கைகளுடன் விளையாடிக் கொண்டிருக்கையில் குறித்த சம்பவம் இடம்பெற்றதாக பெற்றோர் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

விளையாடிக்கொண்டிருந்த 13 வயது சிறுவன் கயிறு இறுகி பலி-13Yr Old Dead While Playing

வழமைபோன்று குறிதத் பகுதியில் விளையாடுவதாகவும், வழமைபோல் நேற்றும் (31) விளையாடிக்கொண்டிருக்கையில் குறித்த பகுதியில் உள்ள கொய்யா மரம் ஒன்றில் விளையாட்டுக்காக கட்டப்பட்டிருந்த கயிற்றில் இறுகி குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளார்.

விளையாடிக்கொண்டிருந்த 13 வயது சிறுவன் கயிறு இறுகி பலி-13Yr Old Dead While Playing

சம்பவம் தொடர்பில் குறித்த சிறுவனின் சகோதரிகள் தாயாரிடம் தெரிவித்தபோது தாயார் குறித்த சிறுவனை பாதுகாக்க முற்பட்டார். எனினும் அயலவர்களின் உதவியுடன் முழங்காவில் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

விளையாடிக்கொண்டிருந்த 13 வயது சிறுவன் கயிறு இறுகி பலி-13Yr Old Dead While Playing

சடலம் முழங்காவில் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகளை முழங்காவில் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

விளையாடிக்கொண்டிருந்த 13 வயது சிறுவன் கயிறு இறுகி பலி-13Yr Old Dead While Playing

இக்குடும்பம் மரணச் சடங்குகளைச் செய்வதற்குக் கூட வசதியற்ற நிலையில் இறந்த சிறுவனது உடலை அடக்கம் செய்வதற்கு பெட்டி வாங்குவதற்கு கூட பணம் இல்லாத நிலையில் ஊரவர்கள் சேர்ந்து அங்கிருக்கும் பலகைகளைக் கொண்டு பெட்டி தயாரிக்கும் சோகமான சம்பவமும் எமது பிராந்திய செய்தியாளரின் கெமராவில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விளையாடிக்கொண்டிருந்த 13 வயது சிறுவன் கயிறு இறுகி பலி-13Yr Old Dead While Playing

(கிளிநொச்சி குறூப் நிருபர் - எம். தமிழ்செல்வன், பரந்தன் குறூப்நிருபர் - யது பாஸ்கரன், எஸ்.என். நிபோஜன்)

Add new comment

Or log in with...