உடப்பு செல்வபுரத்தில் கடையொன்று தீயில் எரிந்து நாசம் | தினகரன்

உடப்பு செல்வபுரத்தில் கடையொன்று தீயில் எரிந்து நாசம்

உடப்பு செல்வபுரத்தில் கடையொன்று தீயில் எரிந்து நாசம்-Shop Burnt-Selvapuram-Udappu

 

உடப்பு செல்வபுரம் பூனைப்பிட்டி கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடையொன்று தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

முகுந்தகுமாரன் ரூபவதனி உரிமையாளரின் கடையே இவ்வாறு எரிந்துள்ளது.

இன்று (01) புதன்கிழமை பகல் 1.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதன் மூலம் ரூபா 15 இலட்சம் மதிப்புள்ள ஹார்ட்வெயார் (Hardware) வர்த்தக பொருட்கள் எரிந்து நாசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்தான மேலதிக விசாரணைகளை உடப்பு பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

(உடப்பு குறூப் நிருபர் - கே. மகாதேவன்)

 


Add new comment

Or log in with...