Saturday, April 20, 2024
Home » இலங்கை பத்திரிகை சம்மேளனத்தின் வருடாந்த மாநாட்டுக்கு அமானா வங்கி அனுசரணை வழங்கியது

இலங்கை பத்திரிகை சம்மேளனத்தின் வருடாந்த மாநாட்டுக்கு அமானா வங்கி அனுசரணை வழங்கியது

by Rizwan Segu Mohideen
November 13, 2023 3:04 pm 0 comment

இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் 68ஆவது வருடாந்த மாநாடு நவம்பர் 1 ஆம் திகதி பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வை முன்னெடுப்பதற்காக இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்துக்கு அமானா வங்கி அனுசரணை வழங்கியிருந்தது. இந்நிகழ்வில் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் இலங்கைக்கான இந்தோனேசியா உயர் ஸ்தானிகர் தேவி குஸ்டினா டோபிங் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் உள்நாட்டு மற்றும் சர்வதேச ஊடகவியலாளர்கள், வெளிநாட்டு இராஜதந்திரிகள், கல்விமான்கள் மற்றும் கலைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர். ஊடகத்துறையில் நீண்ட காலமாக சேவையாற்றி தேசத்தின் முன்னேற்றத்துக்கு பங்காற்றியிருந்த சிரேஷ்ட ஊடகவியலாளர்களுக்கு கௌரவிப்புகளும் வழங்கப்பட்டிருந்தன. இவர்களுக்கு டி.எஃவ். காரியகரவன ஞாபகார்த்த ஊடக தங்க விருது வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த அனுசரணை தொடர்பில் அமானா வங்கியின் நுகர்வோர் வங்கியியல் மற்றும் சந்தைப்படுத்தல் உப தலைவர் சித்தீக் அக்பர் கருத்துத் தெரிவிக்கையில், “மக்களின் குரலை பிரதிபலிக்கும் ஊடகத்துறை, தகவலறியும் சமூகத்தை கொண்டிருப்பதில் முக்கிய பங்காற்றுகின்றது. மக்களுக்கு நட்பான பெறுமதிகளைக் கொண்டுள்ள அமானா வங்கி, இலங்கை பத்திரிகை சம்மேளனத்தின் 68ஆவது வருடாந்த மாநாட்டை முன்னெடுப்பதற்கு கைகோர்த்திருந்ததையிட்டு மகிழ்ச்சியடைவதுடன், தேசத்துக்கு உயர் சேவையாற்றிய சிரேஷ்ட ஊடகவியலாளர்களை கௌரவிப்பதில் பங்கேற்றிருந்ததையிட்டும் மகிழ்ச்சியடைகின்றது.” என்றார்.

இலங்கை பத்திரிகை சம்மேளனத்தின் செயலாளர் நாயகம் குருலு காரியகரவன தமது கருத்தைப் பகிர்ந்து கொள்கையில், “எமது 68 ஆவது வருடாந்த மாநாட்டுக்கு முன்வந்து அனுசரணை வழங்கியிருந்தமைக்காக அமானா வங்கிக்கு நாம் நன்றி தெரிவிக்கின்றோம். இந்த பங்காண்மையினூடாக, எமது சம்மேளனத்தின் நோக்கங்களை தொடர்ந்து நிறைவேற்றக்கூடியதாக இருக்கும் என்பதுடன், நாட்டில் உயர் தரம் வாய்ந்த பொறுப்பு வாய்ந்த ஊடகவியலை பேணுவதற்கு உகந்த சூழலை உருவாக்க உதவியாக அமைந்திருக்கும்.” என்றார்.

இலங்கை பத்திரிகை சம்மேளனத்தில் அச்சு, இலத்திரனியல் மற்றும் டிஜிட்டல் ஊடகங்களின் சகல நிபுணர்களும் அடங்கியுள்ளதுடன், இந்த சம்மேளனம் 1955 ஆம் ஆண்டு, புலமையாளர் சங். உடகெந்தவல ஸ்ரீ சரனங்கர தேரர், நன்மதிப்பை பெற்ற ஊடகவியலாளர்களான டி.எஃப். காரியகரவன மற்றும் ஹேமா டி சில்வா ஆகியோரால் ஸ்தாபிக்கப்பட்டது.

இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்வதுடன், வங்கியின் 29.97% பங்குகளை தன்வசம் கொண்டுள்ளது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. வட்டிசாராத வங்கியியல் மாதிரியின் முன்னோடியான செயற்பாட்டாளர் எனும் வகையில், உலகின் சிறந்த 100 உறுதியான இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக அமானா வங்கியை ஏசியன் பாங்கர் இனால் தெரிவு செய்யப்பட்டிருந்தது. 2023 ஒக்டோபர் மாதம் வெளியிடப்பட்ட தேசிய நீண்ட கால தரப்படுத்தலில் BB+(lka) எனும் உறுதியான தோற்றத்தை வழங்கியிருந்தது.

OrphanCare அமைப்பின் ஸ்தாபக அனுசரணையாளர் என்பதற்கு அப்பால், எவ்விதமான துணை, இணை நிறுவனங்களையும் கொண்டிருக்கவில்லை.

அமானா வங்கியின் உப தலைவர் சித்தீக் அக்பர் அனுசரணை காசோலையை இலங்கை பத்திரிகை சம்மேளனத்தின் செயலாளர் நாயகம் குருலு காரியகரவனவிடம் கையளிப்பதையும், அருகில் அமானா வங்கியின் சந்தைப்படுத்தல் மற்றும் கூட்டாண்மை தொடர்பாடல் தலைமை அதிகாரி அசீம் ராலி மற்றும் இலங்கை பத்திரிகை சம்மேளனத்தின் கிருஷ்ணா எதிரிசிங்க மற்றும் திலங்க கனகரட்ன ஆகியோர் காணப்படுகின்றனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT