விபத்தில் தாயின் வயிற்றை கிழித்து வந்த சிசு உயிர் பிழைப்பு | தினகரன்

விபத்தில் தாயின் வயிற்றை கிழித்து வந்த சிசு உயிர் பிழைப்பு

விபத்தில் தாயின் வயிற்றை கிழித்து வந்த சிசு உயிர் பிழைப்பு-Fetus survived in an Accident

 

பிரேசிலில் பயங்கர வீதி விபத்தொன்றில், கர்ப்பமுற்ற தாயின் வயிறு கிழிக்கப்பட்டு கர்ப்பப்பையில் இருந்து தூக்கி வீசப்பட்ட குழந்தை, அதிசயிக்கத்தக்க வகையில் உயிர் தப்பியுள்ளது.

மரப்பலகைகளை எடுத்துச் செல்லும் ட்ரக் வண்டி ஒன்றிலேயே குறித்த கர்ப்பமுற்ற பெண் பயணித்துள்ளார்.

தென்கிழக்கு பிரேசிலின் சாவோ போலோ மற்றும் கியூரிடிபாவுக்கு இடையில் வைத்து கடந்த சனிக்கிழமை இவ்விபத்து நிகழ்ந்துள்ளது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

இதன்போது வண்டியில் இருந்து வீசப்பட்டிருக்கும் தாய் மரப்பலகைகளில் மோதிய நிலையில் கருப்பையில் இருந்த சிசு கிழித்தெறியப்பட்டு வெளியே வந்துள்ளது.

இந்நிலையில் தாயில் இருந்து தூரத்தில் அந்த பெண் குழந்தை புல்வெளி ஒன்றில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது மருத்துவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இதில் தாய் உயிரிழந்த நிலையில் சிசுவுக்கு எந்த காயமும் ஏற்பட்டிருக்கவில்லை. அந்த குழந்தை பரிகுவேரா அகு பிராந்திய மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறது.

 


Add new comment

Or log in with...