கடத்தப்பட்ட 2 வயது சிறுவன் பொலிஸாரினால் மீட்பு! | தினகரன்

கடத்தப்பட்ட 2 வயது சிறுவன் பொலிஸாரினால் மீட்பு!

கடத்தப்பட்ட 2 வயது சிறுவன் பொலிஸாரினால் மீட்பு-Child Kidnap-Arrested

 

மன்­னார் முருங்­க­னில் நேற்று (29) ஞாயிற்றுக்கிழமை ஆலய வழி­பாட்­டுக்கு பெற்றோ­ரு­டன் சென்ற 02 வய­துச் சிறு­வன் கடத்­தப்­பட்டு சுமார் 4 மணி நேரத்­தில் குறித்த சிறுவனை பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

நேற்­று (29) மதியம்  1.00 மணி­ய­ள­வில் முருங்கன் பகுதியில் உள்ள ஆல­யத்­துக்­கு 2 வயதுடைய சிறு­வன் பெற்­றோ­ரு­டன் சென்­றுள்­ளார்.

சிறிது நேரத்­தின் பின்­னர் சிறு­வ­னை ஆலய பகுதியினுள் காணாத நிலையில் பெற்­றோர் அவரை தேடி­யுள்­ள­னர். எனினும் சிறுவனை அங்கு காணவில்லை.

இதனையடுத்து பெற்றோர் முருங்கன் பொலிஸ் நிலையத்திற்கு உடனடியாக முறைப்பாடு செய்ததோடு, சிறுவனின் உறவினர் ஒருவர் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் கவனத்திற்கும் கொண்டு சென்றிருந்தார்.

இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகரின் கவனத்திற்கும் கொண்டு வந்திருந்தார். இதற்கமைய துரித நடவடிக்கைகளை மேற்கொண்ட பொலிஸார் விசாரணைகளை தொடர்ந்தனர்.

இதன்போது, குறித்த ஆலயத்திற்கு வந்த திருக்­கோ­வி­லைச் சேர்ந்­த­வர், வழி­பாடு முடி­வ­டை­வ­தற்கு முன்  ஆலயத்திலிருந்து வெளி­யே­ சென்றதை விசாரணைகளின் மூலம் அறிந்த பொலிஸார் உடனடியாக திருக்­கோ­வில் பொலி­ஸா­ருக்கு தக­வல் வழங்­கியதோடு, வவு­னி­யா மற்­றும் மன்­னார் மாவட்­டத்­தின் ஏனைய பொலிஸ் பிரி­வு­க­ளும் தகவல் வழங்கியுள்ளனர்.

இதன் போது குறித்த சந்­தே­க­ ந­பர் வவு­னியா பேருந்து நிலை­யத்­தி­லி­ருந்து மன்­னார் நோக்­கிச் செல்­லும் பேருந்­தில் சிறு­வ­னு­டன் ஏறி­யதை வவுனியா பொலி­ஸார் அவ­தா­னித்­துள்ள­னர்.

உடனடியாக செயல்பட்ட பொலிஸார் சந்­தே­க­ந­ப­ரை மடக்­கிப் பிடித்­து கைது செய்­த­தோடு குறித்த சிறுவனையும் மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட சிறுவன் பொலிஸாரின் விசாரணைகளின் பின்னர் இன்று (30) பிற்பகல் பெற்­றோ­ரி­டம் ஒப்படைக்கப்பட்டார்.

சிறு­வ­க் கடத்தப்பட்டமை தொடர்பாகவும், கடத்­தி­ய­மைக்­கான கார­ணம் தொடர்பாகவும் வவுனியா மற்றும் மன்னார்
பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(எஸ்.றொசேரியன் லெம்பேட்)

 


Add new comment

Or log in with...