11 மணி நேர விசேட சோதனையில் 3,325 பேர் கைது | தினகரன்

11 மணி நேர விசேட சோதனையில் 3,325 பேர் கைது

11 மணி நேர விசேட சோதனையில் 3,325 பேர் கைது-11Hr Search Operation 3,325 Arrested Including 948 Suspect with Warrant

 

5,808 போக்குவரத்து வழக்கு; 541 சாரதிகள் போதையில்

நாடு முழுவதும் 11 மணித்தியாலங்களாக மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் 3,325 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கு அமைய, நேற்று (26) இரவு 9.00 மணியிலிருந்து இன்று (27) காலை 8.00 மணி வரை மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைக்கு அமைய, பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 948 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற குறித்த சோதனை நடவடிக்கையில் 16,422 பொலிசார் அதில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதன்போது, போக்குவரத்து விதிமீறல் தொடர்பில் 5,808 பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, போதையில் வாகனம் செலுத்திய 541 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

விபரம்

  • போதையில் வாகனம் செலுத்தியோர் கைது - 541
  • பிடியாணை பிறப்பிக்கப்பட்டோர் கைது - 948
  • பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் கைது - 938
  • போக்குவரத்து வழக்குகள் - 5,808
  • சட்டவிரோத ஆயுதங்களுடன் கைது - 02
  • ஹெரோயின் மற்றும் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மதுபானம் உள்ளிட்ட கைது - 812
  • அனுமதிப்பத்திரம் இன்றி அரசாங்க மதுபானங்களை விற்றல், பொது இடங்களில் மது அருந்துதல் உள்ளிட்ட விடயங்களில் கைது - 84
  • கைது செய்யப்பட்ட மொத்த சந்தேகநபர்கள் - 3,325

குற்றங்களை தடுத்தல் மற்றும் விபத்துகளை குறைப்பது தொடர்பிலும், பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கு அமையவும், நாடு முழுவதும் இவ்வாறான சோதனை நடவடிக்கைகள், பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கு அமைய தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

 

Add new comment

Or log in with...