நிறுத்திவைக்கப்பட்ட நெல் அறுவடை இயந்திரம் தீயில் நாசம் | தினகரன்

நிறுத்திவைக்கப்பட்ட நெல் அறுவடை இயந்திரம் தீயில் நாசம்

பொத்துவிலில் அறுவடை நிறுத்திவைக்ப்பட்ட நெல் அறுவடை இயந்திரம் தீயில் நாசம்-Harvesting Machine Ravaged in Fire-Pottuvil

பொத்துவிலில் சம்பம்

பொத்துவில் றொட்டை வயல் பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நெல் அறுவடை இயந்திரம் ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளது.

இன்று (29) நண்பகல் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொத்துவில் பொலிசார் தெரிவித்தனர்.

பொத்துவில் றொட்டை வயல் பிரதேசத்தில் நெல் அறுவடை மேற்கொள்வதற்காக குறித்த நெல் அறுவடை இயந்திரம் வயலை அண்டிய பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

பொத்துவிலில் அறுவடை நிறுத்திவைக்ப்பட்ட நெல் அறுவடை இயந்திரம் தீயில் நாசம்-Harvesting Machine Ravaged in Fire-Pottuvil

அறுவடையின் பின்னர் அறுவடை செய்த வயலில் வயல்காரர்கள் ஒட்டுக்கு (காய்ந்த பயிர்) நெருப்பு வைத்துள்ளனர், இந்நெருப்பு பரவி, அறுவடை இயந்திரத்திற்கும் பரவியுள்ளது.

தீப்பற்றியதை வீதியால் சென்றவர்கள் அவதானித்தபோதிலும், தீயை அணைப்பதற்கான வசதி இல்லாத காரணத்தினால், குறித்த இயந்திரம் முற்றாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எரிந்த அறுவடை இயந்திரம் பொத்துவில் 07 ஆம் பிரிவைச் சேர்ந்த எம்.எச். சௌபீக் என்பவருடையது என தெரிவிக்கப்படுகிறது.

தற்போது அம்பாறை மாவட்டத்தில் நெல் அறுவடை நடைபெற்றுவருகின்ற நிலையில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(அக்கரைப்பற்று மேற்கு தினகரன் நிருபர் - எஸ்.ரி. ஜமால்தீன்)

 


Add new comment

Or log in with...