42 ஆவது நாள்: மன்னார் என்பு அகழ்வுப் பணியில் பிக்கு மாணவர்கள் | தினகரன்

42 ஆவது நாள்: மன்னார் என்பு அகழ்வுப் பணியில் பிக்கு மாணவர்கள்

42 ஆவது நாள்: மன்னார்  என்பு அகழ்வுப் பணியில் பிக்கு மாணவர்கள்-Mannar Human Skeleton Site Excavations-42nd Day

 

மன்னார் சதொச பகுதியில் இடம்பெற்று வரும் மனித எலும்புக்கூடுகிளின் அகழ்வுப் பணியில் ஹோமாகம பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பௌத்த பிக்குகளும் இணைந்துள்ளனர்.

இன்று (26) வியாழக்கிழமை இடம்பெற்ற இந்த அகழ்வுப் பணியில், மன்னார் சதொச விற்பனை நிலைய கட்டுமானப் பணியின்போது கண்டுப்பிடிக்கப்பட்ட மனித எச்சங்களைத் தொடர்ந்து இன்று (26) 42 ஆவது தினங்களாக இவ்வகழ்வுப் பணி தொடர்ந்தது.

மன்னார்  என்பு அகழ்வுப் பணியில் பிக்கு மாணவர்கள்-Mannar Human Skeleton Site Excavations-42nd Day

மன்னார் மாவட்ட நீதமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் மேற்பார்வையில் சட்ட வைத்திய அதிகாரி டபிள்யூ.ஆர்.ஏ.எஸ். ராஐபக்ஷ தலைமையில் இவ்வகழ்வுப் பணியானது இடம்பெற்று வரும் நிலையில், சட்ட வைத்திய அதிகாரி ராஐபக்ச விடுமுறையில் சென்றுள்ளமையால் அவருக்கு பதிலாக குருணாகல் சட்ட வைத்திய அதிகாரி அஜித் திஸாநாயக்க தலைமையில் களனி பல்கலைக்கழக பேராசிரியர் ராஐசோம தேவாவின் குழுவினர், மற்றும் மூன்று பௌத்த பிக்குமாரும் உள்ளிட்டோர் இணைந்து இன்றைய பணியானது இடம்பெற்றது.

மன்னார்  என்பு அகழ்வுப் பணியில் பிக்கு மாணவர்கள்-Mannar Human Skeleton Site Excavations-42nd Day

இது வரைக்கும் 32 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட நிலையிலும் குழிக்குள் அடையாளமிடப்பட்டிருக்கும் 52 எலும்புக்கூடுகள் மீட்டெடுக்கும் பொறுப்புக்கு அமைய, இப்பணி இடம்பெற்றுவருகிறது.

அத்துடன் அடையாளமிடப்பட்டிருந்த இடத்திலும் மனித எச்சங்கள் எலும்புக்கூடுகள் நோக்கி மிகவும் பக்குவமான முறையில் மணல் அகழ்வும் இடம்பெற்றறமை குறிப்பிடத்தக்கது.

(தலைமன்னார் நிருபர் - வாஸ் கூஞ்ஞ)

 


Add new comment

Or log in with...