மன்னார் மனித புதைகுழி அகழ்வுப் பணி 34 ஆவது நாளாக தொடர்வு | தினகரன்

மன்னார் மனித புதைகுழி அகழ்வுப் பணி 34 ஆவது நாளாக தொடர்வு

மன்னார் மனித புதைகுழி அகழ்வுப் பணி 34 ஆவது நாளாக தொடர்வு-

 

இது வரை 39 எலும்புக்கூடுகள் மீட்பு

மன்னாரில் (பழைய கூட்டுறவு வர்த்தக நிலையம்) சதொச விற்பனை நிலையத்தின் கட்டுமானப் பணி பகுதியில் நடைபெற்று வரும் மனித எச்ச அகழ்வுப் பணி, கடந்த இரு தினங்களின் இடைவெளிக்குப் பின் இன்று திங்கட்கிழமை (16) 34 வது நாளாக நடைபெற்றது.

மன்னார் சதொச விற்பனை நிலைய கட்டுமானப் பணியின்போது கண்டு பிடிக்கப்பட்ட மனித எச்சங்களைத் தொடர்ந்து இது வரைக்கும் 26 மனித எலும்புக் கூடுகள் வெளியில் எடுக்கப்பட்ட நிலையில் 39 எலும்புக்கூடு மற்றும் மண்டையோடுகள் அகழ்வுக்காக அடையாளமிடப்பட்ட நிலையிலேயே இன்றைய அகழ்வுப் பணி இடம்பெற்றது.

அத்துடன் அகழ்வு செய்யப்படும் சதொச வளாகத்துக்கு அருகாமையிலுள்ள நடைபாதையும் அகழ்வு செய்யப்படும் நோக்குடன் விரிவுபடுத்தப்பட்ட நிலையிலேயே இப்பணி முன்னெடுக்கப்பட்டது.

மேலும் கடந்த ஓரிரு தினங்களாக இவ்வகழ்வு பணியையும் சம்பவ இடத்தையும் பொது மக்கள் பார்வையிடும் நோக்குடன் ஒரு பகுதி திறந்து விடப்பட்டிருந்தபோதும் இன்று (16) அப்பகுதி மூடப்பட்ட நிலையிலேயே பணி இடம்பெற்றது.

இப்பணிகள் யாவும், விஷேட சட்ட வைத்திய அதிகாரி டபிள்யூ.ஆர்.ஏ.எஸ். ராஐபக்ச தலைமையில் நடைபெற்று வருவகின்றமை குறிப்பிடத்தக்கது.

(தலைமன்னார் நிருபர் - வாஸ் கூஞ்ஞ)

 


Add new comment

Or log in with...