மன்னார்குடி செண்டலங்கார ஜீயர் தகவல்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிக்காததில் மனித உரிமை மீறல் இல்லை. ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிக்கக் கூடாது என வேதத்திலேயே கூறப்பட்டுள்ளது என மன்னார்குடி செண்டலங்கார ஜீயர் தெரிவித்தார்.
மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை ஆண்டாண்டு காலமாக அனுமதிப்பதில்லை. வேதத்தில் அனுமதிக் கக்கூடாது என சொல்லப்பட்டுள்ளதே அதற்குக் காரணம்.
கார்த்திகை தொடங்கி மார்கழி, தை மாதங்கள் வரை கடும் குளிர் நிலவும் காலமாகும். இந்த காலகட்டத்தில் சபரிமலைக்கு சென்று வரும்போது பக்தர்கள் ஆங்காங்கே மலைப் பிரதேசங்களில் தங்கும் நிலை ஏற்படும். அப்போது பெண்களை அந்த மலைப் பிரதேசங்களில் அனுமதித்தால் அவர்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுவதோடு, ஒரு சிலரால் ஐயப்பனுக்காக பக்தர்கள் இருக்கும் விரதங்களுக்கு பங்கம் ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சியே நம் முன்னோர்கள் இந்த ஏற்பாட்டை செய்துள்ளனர். இது வேதங்களிலும் சொல்லப்பட்டிருக்கிறது. எந்தெந்த வேலைகளை யார், யார் எப்போது செய்ய வேண்டும், ஆன்மிகப் பணிகளில் ஆண்கள் செய்ய வேண்டிய காரியங்கள் எது, பெண்கள் செய்யக்கூடிய காரியங்கள் எது என வேதங்கள் சில வழிகாட்டுதல்களையும் செய்து வைத்துள்ளன.
இந்து மதம் பெண்களை பெருமையாகவே கருதுகின்றது. மகாலெட்சுமியாக பல்வேறு தெய்வங்களாக பூஜித்து பெருமைப்படுத்துகின்ற மதம் இந்து மதம். எனவே சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்களை அனுமதிக்கக் கூடாது என்பதை மனித உரிமை மீறலாக கருதக்கூடாது என்றார்.
There is 1 Comment
Why not allow Females to Sabari Malai
Add new comment