200 கிராம் ஹெரோயினுடன் 44 வயது சந்தேகநபர் கைது | தினகரன்

200 கிராம் ஹெரோயினுடன் 44 வயது சந்தேகநபர் கைது

200 கிராம் ஹெரோயினுடன் 44 வயது சந்தேகநபர் கைது-44 Yr Old Arrested with 201.160g Heroin

 

பொலிஸ் போதைப்பொருள் பிரிவுக்கு கிடைத்த தகவலொன்றுக்கு அமைய 201.160 கிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (23) இரவு, 8.20 மணியளவில், பொலிஸ் போதைப்பொருள் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில், வெலிக்கடை, பண்டாரநாயக்கபுர சமூக மண்டபத்திற்கு அருகிலுள்ள வீதியில் வைத்து குறித்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

பொரளை பிரதேசத்தில் வசிக்கும் 44 வயதான கோட்டவத்த ஹேவகே சந்திரசிறி என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவரை இன்று (24) கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை, பொலிஸ் போதைப்பொருள் பிரிவு மேற்கொண்டுள்ளது.

 


Add new comment

Or log in with...