இறந்தவரை உயிர்ப்பிக்க முயன்ற தீர்க்கதரிசி கைது | தினகரன்

இறந்தவரை உயிர்ப்பிக்க முயன்ற தீர்க்கதரிசி கைது

எத்தியோப்பியாவில் இறந்தவரை உயிர்ப்பிக்க முயற்சி செய்து தோல்வியடைந்த நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தீர்க்கதரிசியாகும் ஆசையில் கெத்தாயவ்கல் அயெலெ என்ற நபர் அந்த அற்புத நிகழ்வைப் படைக்க, இறந்த பிலே பிப்டு என்பவரின் உறவினர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார்.

கிறிஸ்துவர்களின் புனித நூலான பைபிளின்படி இறந்த லஸாரஸை இயேசு மீண்டும் உயிர்ப்பித்தார். அதனை மேற்கோள் காட்டி பிலேயைத் தம்மால் உயிர்ப்பிக்க முடியும் என்று கூறி உறவினர்களின் விருப்பத்தை அவர் பெற்றுள்ளார்.

பிலேயின் உயிரற்ற உடலின்மேல் படுத்துக்கொண்டு “எழுந்திடு பிலே!” என்று இடைவிடாமல் கத்தியுள்ளார். எனினும் அந்த முயற்சி பலனளிக்கவில்லை.

கோபமடைந்த பிலேயின் உறவினர்கள் கெத்தாயவ்கலைத் தாக்க ஆரம்பித்தனர். சிறிது நேரத்தில் அங்கு வந்த பொலிஸ் அதிகாரிகள் கெத்தாயவ்கலைக் கைதுசெய்தனர்.

எத்தியோப்பியாவில் சடலங்களைத் தகாத முறையில் கையாள்வது சட்டப்படி குற்றமாகும்.

சுகாதார பணியாளரான கெத்தாயவ்கல் அயெலெ தற்போது சிறையில் உள்ளார். இறந்த உடலுக்கு அயெலெ உயிரூட்ட முயலும் வீடியோ சமூக வளைத் தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.


Add new comment

Or log in with...