மீண்டும் அரசியல்வாதியாகும் தனுஷ் | தினகரன்

மீண்டும் அரசியல்வாதியாகும் தனுஷ்

மீண்டும் அரசியல்வாதியாகும் தனுஷ்-dhanush-as-a-Politician

 

‘ராஞ்சனா’, ‘‌ஷமிதாப்’ படத்துக்குப் பிறகு நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகர் தனுஷ் பாலிவுட்டில் அரசியல்வாதியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது

‘ராஞ்சனா’, ‘‌ஷமிதாப்’ படத்துக்குப் பிறகு பாலிவுட் பக்கம் செல்லாமல் இருந்த தனுஷ், தற்போது ‘ராஞ்சனா’ இயக்குநர் ஆனந்த். எல்.ராய் இயக்கத்தில் மீண்டும் நடிக்க இருக்கிறார்.

தனுஷ் - சோனம் கபூர், ஸ்வரா பாஸ்கர், அபய் தியோல் நடிப்பில் வெளியான 'ராஞ்சனா’ படத்திற்கு ரசிகர்களிடையே ஓரளவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.

இந்த நிலையில், 'ராஞ்சனா’ இரண்டாவது பாகம் தற்போது உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.

முதல் பாகத்தில் ‘உயிர்த்து எழுவேன்’ எனச் சொல்லி இறந்துபோகும் குந்தன் குமார் பாத்திரம், இரண்டாம் பாகத்தில் உயிர்த்தெழுவது போலவும், காசி நகரில் அரசியல்வாதியாக உருவாவது போலவும் கதை பின்னப்பட்டிருக்கிறதாம்.

கொடி படத்துக்கு பிறகு ஒரு முழு நீள அரசியல் கதையில் தனுஷ் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.


Add new comment

Or log in with...