ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் ரகுல் ப்ரீத் சிங் | தினகரன்


ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் ரகுல் ப்ரீத் சிங்

 

பிரபல நடிகரும், முன்னாள் ஆந்திர முதல்வருமான என்.டி. ராமாராவ் வாழ்க்கை வரலாறு படத்தில் ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் ரகுல் ப்ரீத் சிங் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

தமிழ் நாட்டில் பிறந்து கதாநாயகியாகி தமிழ் சினிமாவில் வெற்றி பெற்று பின்னர் இந்திக்கும் சென்று கொடிகட்டி பறந்தவர் ஸ்ரீதேவி. கடந்த பெப்ரவரி மாதம் மர்மமான முறையில் இறந்தார்.

அவரது வாழ்க்கை வரலாற்றில் நடிக்க நடிகைகள் போட்டி போடுகிறார்கள். ஆனால் ஸ்ரீதேவியாக நடிக்கும் வாய்ப்பை தட்டி சென்றுள்ளார் ரகுல் ப்ரீத் சிங். முழு நீள படத்துக்காக அல்லாமல் தெலுங்கில் உருவாகும் என்.டி.ஆர் வாழ்க்கை வரலாறு படத்தில் ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் ரகுல் ப்ரீத் சிங். இந்த படத்தில் என்.டி.ஆர் மகன் பாலகிருஷ்ணா என்.டி. ஆராகவும், அவரது மனைவியாக வித்யாபாலனும் நடிக்க இருக்கிறார்கள். கீர்த்தி சுரேஷ் சாவித்திரியாக நடிக்கிறார்.

படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. கிரிஷ் ஜகர்லமுடி இயக்கும் இந்த படத்தை, பாலகிருஷ்ணா தயாரிக்கிறார்.

 


Add new comment

Or log in with...