ரஜினியுடன் மோதும் கங்கணா ரணாவத்? | தினகரன்

ரஜினியுடன் மோதும் கங்கணா ரணாவத்?

 

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத், ரஜினியுடன் மோத இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. பிரபல இந்திபட நடிகை கங்கனா ரணாவத். இவர் தமிழில் ‘தாம்தூம்’ படத்தில் நடித்தவர். அதன் பிறகு இந்திப் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். குயின் படம் மூலம் தேசிய விருது வாங்கி இந்திய அளவில் புகழ்பெற்றவர். அவர் அடுத்து நடிக்கும் படம் மணிகர்ணிகா.

சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய ராணியான ஜான்சிராணியின் வாழ்க்கை வரலாற்று படமான இதை கிரிஷ் இயக்குகிறார்.

இதற்காக கங்கனா வாள் சண்டை, குதிரையேற்றம் உள்ளிட்ட பலவித போர் பயிற்சிகளை எடுத்து இருக்கிறார். இந்த படம் முதலில் ஏப்ரலில் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டது. படப்பிடிப்பு முடியாததால் ஆகஸ்ட் மாதத்துக்கு தள்ளிப்போனது. ஆனால் ஆகஸ்டிலும் வெளியாவது சிரமம் என்று நவம்பர் 29- ஆம் திகதிக்கு தள்ளி வைத்திருக்கிறார்கள். இவர்கள் அறிவித்திருக்கும் திகதியில் தான் ரஜினிகாந்த், அக்‌‌ஷய் குமார் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் 2.0 வெளியாக இருக்கிறது. இந்த மோதலை தவிர்க்க 3 ஆவது முறையாக மணிகர்ணிகா படத்தின் வெளியீட்டை தள்ளி வைப்பார்களா என்பது தான் பாலிவுட்டில் கேள்வியாக எழுந்துள்ளது.

 


Add new comment

Or log in with...