வலப்பனை முன்னாள் பி.சபை தலைவருக்கு 12 வருட கடூழிய சிறை | தினகரன்

வலப்பனை முன்னாள் பி.சபை தலைவருக்கு 12 வருட கடூழிய சிறை

வலப்பனை முன்னாள் பி.சபை தலைவருக்கு 12 வருட கடூழிய சிறை-Walapany PS Ex Chairman Jagath Kumara Samarahewa

 

  • அரச வாகன முறைகேடு; சட்ட விரோத ஆயுதம் வைத்திருந்த குற்றச்சாட்டு
  • ரூபா 1 கோடி 5 இலட்சம் அபராதம்

வலப்பனை ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளரும் அப்பிரதேச சபையின் முன்னாள் பிரதேச சபை தலைவருமான, ஜகத் குமார சமரஹேவாவுக்கு, 12 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2004 ஆம் ஆண்டு அரச வாகனம் ஒன்றை முறைகேடாக பயன்படுத்தியமை மற்றும் சட்ட விரோத ஆயுதத்தை தம் வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பிலான வழக்கின் குற்றவாளியான ஜகத் குமார சமரஹேவா மற்றும் இன்னுமொரு சந்தேகநபரும் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டதை அடுத்து, அவர்களுக்கு 12 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

உடபுஸ்ஸல்லாவ பொலிசாரால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த வழக்கு இன்று (23) எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி எஸ்.யூ.பி. கரலியத்த அதன் தீர்ப்பை வழங்கினார்.

முறைகேடாக பயன்படுத்திய வாகனத்தின் பெறுமதியின் மூன்று மடங்கான, ரூபா ஒரு கோடி 5 இலட்சத்தை (ரூ. 105 இலட்சம்) அபராதமாக செலுத்துமாறும் நீதிமன்றம் இதன்போது உத்தரவிட்டது.

 


Add new comment

Or log in with...