கட்டுநாயக்கவில் 3 கிலோ தங்கம் மீட்பு | தினகரன்

கட்டுநாயக்கவில் 3 கிலோ தங்கம் மீட்பு

கட்டுநாயக்கவில் 3 கிலோ தங்கம் மீட்பு-3.2kg Gold Worth Rs. 19 million Found in BIA

 

கட்டுநாயக்கா விமான நிலையத்தில் 3 கிலோ கிராம் (3.248kg) எடை கொண்ட தங்கம் மீட்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தின் தீர்வையற்ற வர்த்தக நிலையத்தில் (Duty-free Shop) பணி புரியும் ஊழியர் ஒருவர், விமான நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நீர் பருகும் தொட்டிக்கு அருகிலிருந்து குறித்த தங்கக் கட்டிகளைக் கொண்ட பொதியை கண்டெடுத்தாக தெரிவித்து, சுங்க அதிகாரிகளிடம் அதனை ஒப்படைத்துள்ளதாக, சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளரும், ஊடக பேச்சாளருமான சுனில் ஜயரத்ன தெரிவித்தார்.

குறித்த பொதியில் 116 கிராம் கொண்ட 28 தங்கக் கட்டிகள் காணப்பட்டதாகவும், அவறறின் பெறுமதி ரூபா ஒரு கோடியே  95 இலட்சத்து 92,160 (ரூ. 19,592,160) என மதிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்கா சுங்க பிரிவு மேற்கொண்டு வருகின்றது.

 


Add new comment

Or log in with...