தெற்கில் காற்று; கிழக்கு, ஊவாவில் பிற்பகலில் மழை | தினகரன்

தெற்கில் காற்று; கிழக்கு, ஊவாவில் பிற்பகலில் மழை

தெற்கில் காற்று; கிழக்கு, ஊவாவில் பிற்பகலில் மழை-Weather-Gusty Wind-Rain

 

நாட்டின் தென் மாகாணத்தில், மணிக்கு 50 - 60 கிலோமீற்றர் வரை குறிப்பிடப்படும்படியான பலத்த காற்று வீசலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

சப்ரகமுவா, மேல், மத்திய மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை, குருணாகல் மாவட்டங்களில் ஓரளவு மழை பெய்யலாம்.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும், திணைக்களம் அறிவித்துள்ளது.

தென் மாகாணத்தில், இடைக்கிடை மணிக்கு 50 - 60 கிலோ மீற்றர் வரையான கடும் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 


Add new comment

Or log in with...