Thursday, March 28, 2024
Home » கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப்பணி
2ஆவது நாளாகவும் நேற்று தொடர்ந்த

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப்பணி

by mahesh
November 22, 2023 8:00 am 0 comment

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப்பணி மீண்டும் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் இரண்டாவது நாளாகவும் அகழ்வுப்பணி நேற்று செவ்வாய்க்கிழமை (21) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் இடம்பெற்றது.

முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவ, தடையவியல் பொலிஸார், கிராம அலுவலர் ஆகியோரின் பிரசன்னத்துடன் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் இந்த அகழ்வுப்பணி முன்னெடுக்கப்பட்டது.

இடைநிறுத்தி வைக்கப்பட்ட கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வுப்பணி நேற்று முன்தினம் திங்கட்கிழமை (20) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வுப்பணி கடந்த செப்டெம்பர் மாதம் 6ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு, அம்மாதம் 15ஆம் திகதிவரை ஏற்கெனவே இடம்பெற்றிருந்ததுடன், இதன்போது 17 எலும்புக்கூட்டுத் தொகுதிகள், துப்பாக்கிச் சன்னங்கள், விடுதலைப் புலிகள் அமைப்பினர் பயன்படுத்தும் இலக்கத்தகடு, உடைகள் உள்ளிட்ட சான்றுப்பொருட்கள் மீட்கப்பட்டிருந்தன.

ஓமந்தை விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT