332 பைக்கற் ஹெரோயினுடன் லொறியில் சென்ற 06 பேர் கைது | தினகரன்

332 பைக்கற் ஹெரோயினுடன் லொறியில் சென்ற 06 பேர் கைது

332 பைக்கற் ஹெரோயினுடன் லொறியில் சென்ற 06 பேர் கைது-6 Arrested with 332 Packet Heroin

 

லொறியில் சென்ற 06 பேரிடமிருந்து 332 பைக்கற் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

இன்று (22) முற்பகல், ஹப்புத்தளை, விஹாரகல பிரதேசத்தில் வைத்து, லொறி ஒன்றில் சென்று கொண்டிருந்தவர்களை சோதனையிட்ட போது, 332 ஹெரோயின் போதைப்பொருள் பொட்டலங்களை கைப்பற்றியதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

லொறி ஒன்றில் ஹெரோயினை கடத்துவதாக, ஹப்புத்தளை பொலிசாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, ஹெரோயினை வைத்திருந்த குறித்த 06 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

குறித்த சந்தேகநபர்கள் 06 பேரும் 35, 36, 39 வயதுடைய, அங்குலானை, பாணந்துறை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என, தெரியவந்துள்ளது.

லொறியில் அலுமினியம் பொருட்களை கொண்டு செல்லும் நோக்கில், ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே இவர்கள், இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் அளவு தொடர்பில் விசாணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.4

 


Add new comment

Or log in with...