2018 உலகக் கிண்ண கால்பந்து ட்விட்டரில் 115 பில்லியன் பதிவுகள் | தினகரன்

2018 உலகக் கிண்ண கால்பந்து ட்விட்டரில் 115 பில்லியன் பதிவுகள்

ரஷ்ய ஆடுகளத்தில் மட்டும் இல்லை, உலகக் கிண்ண கால்பந்து 2018, மிகப்பெரிய கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சத்தில் மட்டுமல்ல, 115 பில்லியன் பதிவுகளைப் பெற்று ட்விட்டரிலும் தன் செல்வாக்கை நிலைநாட்டியுள்ளது.

உலகக் கால்பந்தில் பங்கேற்ற நாடுகளின் மனம் நிறைந்த ஒவ்வொரு வெற்றிக் கொண்டாட்டத்தின் போதும், தோல்விகளின்போதும் ட்விட்டர் மைக்ரோ வலைத்தளம் நிரம்பி வழிந்தது. ஒவ்வொரு உணர்ச்சிகரமான தருணத்திலும் உலகம் முழுவதிலும் உள்ள கால்பந்து ரசிகர்கள் பொங்கி எழுந்தார்கள்.

ஜூன் 14 அன்று தொடங்கிய உலகக் கிண்ணத்தின் பல்வேறு நிகழ்வுகள் ஜூலை 15 அன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் பிரான்ஸும் குரோஷியாவும் மோதிக்கொண்டது வரை ஆட்டத்தின் வெற்றிப் புள்ளிகளைத் தருவதில் ட்விட்டர் மிகப்பெரிய பங்கு வகித்தது.

எப்ஐஎப்ஏ 2018 உலகக் கிண்ண கால்பந்து விளையாட்டின்போது பிரான்ஸும் குரோஷியாவும் மோதிக்கொண்ட அந்த இறுதி நாள் மட்டும் அதிகபட்சமாக 115 பில்லியன் ரசிகர்களின் (1 பில்லியன் என்பது 100 கோடி) ட்வீட்கள் பதிவாகியுள்ளன.

மேலும், உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் குரோஷியாவை வெற்றிகொண்டு பிரான்சின் நான்காவது கோலை கிலியன் எம்பாப்பி தட்டிச்சென்றபோது எக்கச்சக்கமான ட்வீட் பதிவுகள் இந்த மைக்ரோ வலைத்தளத்தில் அலையெனப் பெருகி வழிந்தன.

இது ஜூன் 22-ல் கோஸ்டா ரிக்காவி நிர்ணயித்த 1-0 புள்ளிகளில் இலக்கை வெற்றிகொண்டு கூடுதல் நேரம் பிலிப் போடினோவின் இலக்கைத் தொடர்ந்து வந்தது.

தென்கொரியா வெறும் 2-0 புள்ளிகளில் ஜூன் 27-ல் ஜெர்மனிக்கு செக் வைத்து மூன்றாவது இடத்திற்கு வந்தபோதும் ட்வீட் பதிவுகள் அதிகமாகவே இருந்தன.

பிரேசிலில் கால்பந்து ரசிகர்கள், ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் போன்ற வேறு எந்த நாட்டின் விளையாட்டையும் ரசித்து ட்வீட்களைப் பகிர்ந்துகொண்டனர். இது பிரேசில் ரசிகர்கள் இயல்பாகவே கால்பந்து காதலர்கள் என்பதை எடுத்துக்காட்டியது.

விளையாட்டில் பங்கேற்றவர்களில் அதிகம் ட்விட்டரில் குறிப்பிடப்பட்டவர் பிரேசிலின் கால்பந்து நட்சத்திரம் நெய்மர். அவரைத் தொடர்ந்து ஆர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி, போர்ச்சுகல் நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ, பிரான்சின் கெலின் மபெப் மற்றும் பிரேசிலின் பிலிப் கூடினோ ஆகியோர் முதலிடத்தில் உள்ளனர்.


Add new comment

Or log in with...