முன்னாள் அமைச்சர் மஹ்ரூப்பிற்கு துஆப் பிரார்த்தனை | தினகரன்

முன்னாள் அமைச்சர் மஹ்ரூப்பிற்கு துஆப் பிரார்த்தனை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ஈ.எச். மஹ்ரூப் 21 வது நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று (20) துஆ பிரார்த்தனை நிகழ்வொன்று கிண்ணியா கண்டலடியூற்று மஜ்ஜிதுல் காதரிய்யாவில் நடைபெற்றது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ஈ.எச். மஹ்ரூபுடன் படுகொலை செய்யப்பட்ட மர்ஹூம் மன்சூர்(சாரதி) மற்றும் அவரின் 7 வயது மகன், மர்ஹூம் உஸ்மான் (நிந்தவூர்) மர்ஹூம் அஸ்ஸதுல்லாஹ் (பொலிஸ்) மர்ஹூம் லத்திப் மாஸ்டர் ஆகியோருக்காகவும் பள்ளி இமாம் மெளலவி றியால் குர்ஆன் தமாம் செய்து துஆப்பிரார்த்தனையும் செய்யப்பட்டது. இதனை கிண்ணியா கண்டலடியூற்று பிரதேச மக்களும் பள்ளி நிருவாகத்தினரும் ஏற்பாடு செய்திருந்திருந்தனர்.

இவ் வைபவத்தில் கிண்ணியா நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.நளீம், நகரசபை உறுப்பினர் ஜே.றிஸ்வி மற்றும் பிரதேச சபை உறுப்பினர் தெளபீக் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

திருமலை மாவட்ட விசேட நிருபர்


Add new comment

Or log in with...