Saturday, April 20, 2024
Home » 19 வயதுக்குட்பட்ட உலகக்கிண்ணத் தொடரை இழந்த இலங்கை

19 வயதுக்குட்பட்ட உலகக்கிண்ணத் தொடரை இழந்த இலங்கை

- ICC இன் அதிரடி தீர்மானம்

by Prashahini
November 21, 2023 3:26 pm 0 comment

– தென்னாபிரிக்காவுக்கு கொண்டு செல்ல தீர்மானம்
– SLC மீதான ICC தடையில் மாற்றமில்லை; கிரிக்கெட் விளையாட தடையில்லை
– கட்டுப்பாட்டின் அடிப்படையில் நிதி வழங்கப்படும்

எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கையில் இடம்பெறவிருந்த, 19 வயதுக்குட்பட்ட ICC இளையோர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் தென்னாபிரிக்காவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் (SLC) நிறுவனத்தினல் ஏற்பட்டுள்ள நிர்வாக சிக்கல்கள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக,
கிரிக்கெட் செய்திகள் தொடர்பான பிரபல இணையத்தளமான Cricbuzz தெரிவித்துள்ளது.

இந்தியாவின் அகமதாபாத்தில் தற்போது இடம்பெறும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக Cricbuzz மேலும் தெரிவித்துள்ளது.

விரிவான கலந்துரையாடலைத் தொடர்ந்து, கடந்த நவம்பர் 10 ஆம் திகதி இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தைத (SLC) இடைநிறுத்துவதற்கான முடிவை மாற்றாதிருக்க ICC தீர்மானிதுள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் (SLC) தொடர்பான தடை அமுலில் உள்ள போதிலும் இலங்கை தேசிய அணி பங்குபற்றும் போட்டிகளுக்கு அது பாதிப்பை ஏற்படுத்தாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இது சபையின் ஒருமித்த முடிவாகும் என செய்தி மூலமொன்றை சுட்டிக்காட்டி Cricbuzz குறிப்பிட்டுள்ளது.

தற்போது (21) அகமதாபாத்தில் உள்ள ITC நர்மதாவில் நடைபெறும் ICC கூட்டத்தில் இலங்கை கிரிக்கெட் தலைவரான ஷம்மி சில்வாவும் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் விளையாட்டைத் தொடர அனுமதிக்குமாறு தாம் ICC யிடம் கோரியதாகவும். அதன் உறுப்பினர்கள் தங்கள் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாகவும், ஷம்மி சில்வா Cricbuzz இற்கு தெரிவித்துள்ளாதாக, அவ்விணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன், தென்னாபிரிக்காவில் நடைபெறும் 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணி பங்கேற்கும் எனவும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

எனினும், சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு வழங்கப்படும் பணத்தை கடுமையான கட்டுப்பாடுகளுக்கு அமைய விடுவிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடர், எதிர்வரும் 2024 ஜனவரி 14 முதல் பெப்ரவரி 15 வரை நடைபெற இருந்தது.

ஜனவரி 10 முதல் பெப்ரவரி 10 வரை நடைபெறும் SA20 தொடரின் இரண்டாவது பதிப்புடன் இத்திகதிகள் கலக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஆயினும் ரி20 லீக் ஆனது, தென்னாபிரிக்க கிரிக்கெட் நிறுவனத்திற்கு (CSA) அப்பாற்பட்ட சுயாதீனமான ஒரு அமைப்பால் தன்னாட்சி முறையில் மேற்பார்வை செய்யப்படுவதால் இரண்டு நிகழ்வுகளும் ஒரே நேரத்தில் இடம்பெறுவதில் சிக்கல் இல்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

ஓமான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இந்நிகழ்வை நடத்துவதற்கான தெரிவும் பரிசீலிக்கப்பட்ட போதிலும், சிறந்த உட்கட்டமைப்பு காரணமாக தென்னாப்பிரிக்கா இறுதியில் தெரிவு செய்யப்படட்டுள்ளது. இதற்கு மூன்று மைதானங்கள் தேவையாக உள்ளேபோதிலும் ஓமானில் ஒன்று மாத்திரமே உள்ளது. ஆயினும், ஐக்கிய அரபு இராசச்சியம் மற்றும் ஓமான் இடையே அணிகளை கொண்டு செல்வது அதிக செலவு மிக்கதாக இருந்திருக்கும் என்பதாலும் இறுதியாக தென்னாப்பிரிக்கா தெரிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT