பாதுகாப்பு சூழ்நிலைக்காகவே தவிர வன்முறைகளை உருவாக்கவல்ல | தினகரன்

பாதுகாப்பு சூழ்நிலைக்காகவே தவிர வன்முறைகளை உருவாக்கவல்ல

விடுதலைப் புலிகள் மீண்டும் வர வேண்டுமென்ற விஜயகலாவின் கூற்று பாதுகாப்பு சூழ்நிலைக்காகவே தவிர, வன்முறைகளை உருவாக்கும் நோக்கத்தில் இல்லை என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்

விஜயகலா மகேஸ்வரனின் உரை தொடர்பாக அன்றைய நிகழ்வில் கலந்துகொண்ட பிரமுகர்கள் மற்றும் ஊடகவியலாளர்களிடம் மேற்கொண்ட விசாரணையிலே குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரிடம் மேற்கண்டவாறு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பாக பேசிய அவர் விஜயகலா மகேஸ்வரன் பங்கு பற்றிய நிகழ்வில் பங்கேற்றபடியால் என்னிடம் சில கேள்விகள் கேட்டார்கள். அமைச்சர்கள் வஜிர அபேவர்த்தன, திலக் மாரப்பன போன்றவர்களிடமும் வாக்குமூலம் பெற்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். விஜயகலா மகேஸ்வரனின் உரையில் இடம்பெற்ற சில கேள்விக்கிடமான பகுதிகளைப் பற்றிய கருத்தைக் கேட்டார்கள்.

முன்னைய காலத்தில் இருந்ததைப் போன்று அந்த நாள் திரும்பி வந்திடாதோ என்று ஒருவர் அங்கலாய்ப்பது குற்றமாகாது எனக்சுட்டிக் காட்டினேன்.புலிகள் திரும்பவும் வர வேண்டும் என்று நாங்கள் பாடுபடுகின்றோம் என்று அவர் கூறியது இன்றைய பாதுகாப்புச் சூழலையே தவிர வன்முறைகளை மீண்டும் தொடக்கும் நோக்குடன் அவர் அவ்வாறு கூறவில்லை என்றும், விஜயகலா மகேஸ்வரன் தனது கட்சிக்கு விசுவாசமாகவே இதுவரை காலமும் செயற்பட்டார் என்பதனைப் புரிந்து கொள்ள வேண்டும். அவருக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் அது எமது பேச்சுச் சுதந்திரத்தைப் பாதிப்பதாகும் என்றும் எடுத்துக் கூறியதாக முதலமைச்சர் தெரிவித்தார்.

 


Add new comment

Or log in with...