ரஷ்யாவுக்கு உளவுபார்த்ததாக அமெரிக்காவில் பெண் கைது | தினகரன்

ரஷ்யாவுக்கு உளவுபார்த்ததாக அமெரிக்காவில் பெண் கைது

ரஷ்யாவுக்கு உளவுபார்த்த குற்றச்சாட்டியில் அமெரிக்காவில் 29 வயது ரஷ்ய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அரசியல் குழுக்களுக்குள் ஊடுருவி ரஷ்ய அரச முகவராக சதி வேலையில் ஈடுபட்டதாக அந்த பெண் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

குடியரசு கட்சியுடன் நெருக்கமான உறவை கொண்டிருக்கும் மரியா புடினா என்ற அந்தப் பெண், துப்பாக்கி உரிமைக்காக குரல்கொடுப்பவராகவும் உள்ளார் என்று அமெரிக்க ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. எனினும் 2016 ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு குறித்த விசாரணையுடன் இந்த குற்றச்சாட்டுகள் தொடர்புபடவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

ரஷ்ய அரசின் உயர்மட்டத்துடன் நேரடியாக பணியாற்றுவதாக அந்த பெண் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. எனினும் அவர் உளவாளி இல்லை என்றும் சர்வதேச உறவுகள் தொடர்பிலான மாணவி என்றும் மரியா புடினாவின் வழக்கறிஞர் ரொபர்ட் ட்ரிஸ்கோல் குறிப்பிட்டுள்ளார்.


Add new comment

Or log in with...