சீனன் கோட்டை ஸன் ரைஸ் விளையாட்டுக் கழகம் சம்பியனாக தெரிவு | தினகரன்

சீனன் கோட்டை ஸன் ரைஸ் விளையாட்டுக் கழகம் சம்பியனாக தெரிவு

அகில இலங்கை உதைப் பந்தாட்ட சம்மேளனம் எப்.ஏ சம்பியன் வெற்றிக்கிண்ணத்திற்காக நடாத்தும் லீக் மட்ட உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் பேருவளை சீனன் கோட்டை ஸன் ரைஸ் விளையாட்டுக் கழகம் களுத்துறை உதைபந்தாட்ட லீக் மட்டத்தில் சம்பியனாக தெரிவாகியுள்ளது.

களுத்துறை வேர்னன் பெர்னாந்து விளையாட்டரங்கில் நடைபெற்ற மூன்று உதைப்பந்தாட்ட போட்டிகளிலும் ஸன் ரைஸ் விளையாட்டுக் கழகம் வெற்றிவாகை சூடி செம்பியனாக தெரிவானது.

களுத்துறை யங் ஸ்டார் விளையாட்டுக் கழகந்துடன் மொதி 2-1 என்ற போல் வீதத்திலும், களுத்துறை எயார் லன்கா விளையாட்டுக் கழகத்துடன் மோதி 4-2 என்ற கோல் வித்தியாசத்திலும், மங்கொனை ஸக்ஸஸ் விளையாட்டுக் கழகத்துடன் மோதி 2-0 என்ற கோல் வீதத்திலும் வெற்றிபெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

அகில இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனம் அகில இலங்கை ரீதியில் உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்ட 50 விளையாட்டுக் கழகங்களுள் சீனன் கோட்டை ஸன் ரைஸ் விளையாட்டுக் கழகமும் அடங்குவதாக அதன் செயலாளர் கிஸான் ஹாஷிம் தெரிவித்தார். களுத்துறை மாவட்டத்தில் பிரபல விளையாட்டுக் கழகங்களுள் ஒன்றான சீனன் கோட்டை ஸன் ரைஸ் விளையாட்டுக் கழகத்திற்கு அல்தாப் அமீன் தலைமை தாங்குகிறார். கோல் காப்பாளராக முஹம்மத் முஷாகில் பதவி வகிப்பதோடு எம் ஆதிப், முஹம்மத் முஷாகித், அஷ்பாக் அலி, அஷ்மல் ஹாரிஸ், முஹம்மத் ஷஹ்மி, முஹம்மத் மபாஸ், எம் ரிஷாத், பஸ்லுர்ரஹ்மான், முஹம்மத் இம்ரான், பௌஸர் அலி, முஹம்மத் அல்தாப், எம். அர்கம், முஹம்மத் அரபாத், எம் அகீல், முஹம்மத் இஹ்ஸான்,முஹம்மத் ஸினான், முஹம்தம் நஸ்ரத், முஹம்மத் அப்துர் ரஹ்மான், சிபாகத் ரஹ்மான் ஆகியோர் விளையாடுகின்றனர்.

40 வருடங்களை பூர்த்தி செய்துள்ள சீனன் கோட்டை ஸன்ரைஸ் விளையாட்டுக் கழகம் பிரதேச, மாவட்ட மாகாண, தேசிய, சர்வதேச மட்டத்தில் உதைப்பந்தாட்ட வீரர்களை உருவாக்கி பேருவளைக்கு புகழ் சேர்த்த ஓர் விளையாட்டுக் கழகம் என்பதில் இங்கு குறிப்பிடத்தக்கது.

முஹம்மத் பிஷ்ஷையின் வழிகாட்டலின் கீழ் விiயாட்டு வீரர்களுக்கு சிறப்பாக பயிற்சி வழங்கப்படுவதோடு செயலாளர் கிஸான் ஹாஷிம் விளையாட்டு வீரர்களை சகல போட்டிகளுக்கும் நெறிப்படுத்தி வருகிறார்.

பேருவளை விஷேட நிருபர் 

 


Add new comment

Or log in with...