அடக்குமுறைக்கு எதிரான போராட்ட சரித்திர நாயகன் | தினகரன்

அடக்குமுறைக்கு எதிரான போராட்ட சரித்திர நாயகன்

நெல்சன் மண்டேலா தினம் இன்று

நிறவெறிக்கு எதிராகப் போராடிய உலகின் முக்கிய தலைவர்களுள் ஒருவரும், தென்னாபிரிக்காவில் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவருமான நெல்சன் மண்டேலாவின் பிறந்த தினம் இன்று உலகமெங்கும் அனுஷ்டிக்கப்படுகின்றது.மண்டேலாவின் பிறந்த தினத்தை 'மண்டேலா தினம்' என்று ஐ.நா பிரகடனப்படுத்தியிருந்தது.

ஆரம்பத்தில் அறப்போர் (வன்முறையற்ற) வழியில் நம்பிக்கை கொண்டிருந்த இவர், பின்பு ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் இராணுவப் பிரிவுக்குத் தலைமை தாங்கினார்.

இவர்கள் மரபுசாரா கெரில்லாப் போர்முறைத் தாக்குதலை நிறவெறி அரசுக்கு எதிராக நடத்தினர். மண்டேலாவின் 27 ஆண்டு சிறைவாசம், நிறவெறிக் கொடுமையின் பரவலாக அறியப்பட்ட சாட்சியமாக விளங்குகிறது.

சிறையின் பெரும்பாலான காலத்தை இவர் ராபன் தீவில் சிறிய சிறை அறையில் கழித்தார். 1990இல் அவரது விடுதலைக்குப் பிறகு அமைதியான முறையில் புதிய தென்னாபிரிக்கக் குடியரசு மலர்ந்தது. மண்டேலா, உலகில் அதிகம் மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவராக போற்றப்படத் தொடங்கினார்.

கிடந்த தென்னாபிரிக்காவை மக்களாட்சியின் மிளிர்வுக்கு இட்டுச் சென்றவர். அமைதிவழிப் போராளியாக, ஆயுதப் போராட்டத் தலைவனாக, தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்ட குற்றவாளியாக, 27 ஆண்டுகள் சிறையில் வாடி பின்னர் விடுதலையாகி குடியரசுத் தலைவராக, அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவராக இவரின் அரசியல் பயணம் தொடர்ந்தது. 2008ஆம் ஆண்டு ஜூன் மாதம் பொது வாழ்க்கையிலிருந்து விலகுவதாக மண்டேலா அறிவித்தார்.

உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் 2013 ஜூன் மாதம் 8-ம் திகதி மண்டேலா பிரிட்டோரியாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நெல்சன் மண்டேலாவின் நெருங்கிய உறவினர்கள் அனைவரும் பூர்வீக வீட்டிற்கு அவசரமாக வரவழைக்கப்பட்டனர். அவர்கள் மண்டேலா நலமடைந்து வீடு திரும்ப பிரார்த்தனை நடத்தி வந்த நிலையில் 5 ஆம் திகதி டிசம்பர் 2013 அன்று தனது 95வது அகவையில் அவர் காலமானார்.

1993ல் உலக அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான 'மகாத்மா காந்தி சர்வதேச விருது' நெல்சன் மண்டேலாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. உலக சமாதானத்துக்காக மண்டேலா ஆற்றிய சேவைகளைப் பாராட்டி அவர் சிறையில் இருக்கும்போதே இந்திய அரசு 'நேரு சமாதான விருது' வழங்கியது. கணவர் சார்பில் வின்னி டெல்லிக்கு வந்து அந்த விருதைப் பெற்றார்.1990-இல் இந்தியாவின் ‘பாரத ரத்னா’ விருதும் வழங்கப்பட்டது. நெல்சன் மண்டேலா ஒருவருக்கு மட்டுமே இந்தியர் அல்லாத ஒருவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

நெல்சன் மண்டேலாவின் பிறந்த நாளான ஜூலை 18ம் திகதியை சர்வதேச நெல்சன் மண்டேலா தினமாக ஐ.நா அறிவித்திருந்தது.

ரசிகர்கள், அரசியல்வாதிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பிரபலங்கள் முன்னிலையில், ​ேசர் வின்ஸ்டன் ​ேசர்ச்சில் மற்றும் ஆபிரகாம் லிங்கன் அருகில் நெல்சன் மண்டேலாவின் வெண்கல சிற்பம் 30 ஆகஸ்ட் 2007 இல் இங்கிலாந்து பாராளுமன்ற சதுக்கத்தில் வைக்கப்பட்டது.

நெல்சன் மண்டேலா பிறந்த தினமான இன்று அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் சில வருமாறு:

q தென்னாபிரிக்காவின் குலு என்ற கிராமத்தில் பிறந்தார் (1918). தந்தை, சோசா பழங்குடி இன மக்களின் தலைவர். 9-வது வயதில் தந்தை காலமானார். அந்தக் குடும்பத்தில் முதன்முதலில் பாடசாலை சென்றவர் இவர்தான். இவர் முதலில் படித்த பாடசாலையில் இவருக்கு ‘நெல்சன்’ என்று பெயர் சூட்டப்பட்டது.

q லண்டன், தென்னாபிரிக்கா பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பை மேற்கொண்டார். சட்டக் கல்வியும் பயின்றார். கறுப்பின மக்கள் நலனைப் பாதுகாப்பதற்காக உருவான ஆபிரிக்க தேசிய காங்கிரஸில் இணைந்து, அதன் தலைவரானார். இனவாதக் கொள்கைகளுக்கு எதிராக அறப் போராட்டங்களை நடத்தியதால் அரசு இவரைக் கைது செய்தது. 4 ஆண்டு விசாரணைக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டார்.

q அறப் போராட்டத்தை அரசு இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கியது. இதனால் அறப்போராட்டத்தைக் கைவிட்டு ஆயுத வழிமுறையை நாடினார். 1961இ-ல் இந்த இயக்கத்தின் ஆயுதப்படைத் தலைவராக உருவெடுத்தார். ஆதரவு நாடுகளின் உதவியுடன் கொரில்லா தாக்குதல்களை நடத்தினார்

q இவர்மீது மனிதஉரிமை மீறல்கள் குற்றம் சாட்டப்பட்டது. அமெரிக்காவும் இவர் மீது பயங்கரவாத முத்திரையைக் குத்தியது. 1962இல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 1964-இல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது இவருக்கு வயது 46. சிறைவாசம் 27 ஆண்டுகள் நீடித்தது

q இவ்வளவு நீண்ட சிறைத்தண்டனையை உலகில் எந்தத் தலைவரும் அனுபவித்தது கிடையாது. 1988-இல் கடுமையான காசநோய் தாக்கியும் விடுதலை செய்யப்படவில்லை. ‘மன்னிப்புக் கேட்டால் விடுதலை செய்கிறோம்’ என்ற அரசின் நிபந்தனையை நிராகரித்தார்.

q நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அரசு பதவியேற்றது. புதிய அரசு இவருடன் பேச்சுவார்த்தை நடத்தியது. தென்னாபிரிக்கா ஒரு மக்களாட்சி நாடாகப் பின்னர் மலர்வதற்கு இந்தப் பேச்சுவார்த்தைகள் முக்கிய பங்கு வகித்தன. இறுதியில் 1990-ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். அப்போது இவருக்கு வயது 71.

q வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும் நாட்டு விடுதலைக்காகவும் தொடர்ந்து போராடினார். இறுதியில் 1994இ-ல் நாடு விடுதலை அடைந்தது. தென்னாபிரிக்காவின் முதல் கறுப்பின ஜனாதிபதியானார். 1999-இல் பதவியைவிட்டு விலகிய இவர், 2-வது முறை போட்டியிட மறுத்து விட்டார்.

q அடக்குமுறையாளர்களுக்கும் அடக்கப்பட்டவர்களுக்கும் இடையே நல்லிணக்கம் ஏற்படும் பல்வேறு முனைப்புகளில் ஈடுபட்டார். உண்மை மற்றும் சமாதான ஆணையத்தை (Truth and Reconciliation Commission) அமைத்தார். உலக வரலாற்றில் இந்த முனைப்பு ஒரு சிறந்த முன்மாதிரியாக கருதப்படுகிறது.

q இவர் உலகம் முழுவதும் 250இற்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார். நிறவெறிக்கு எதிரான போராட்டங்களுக்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்த நெல்ஸன் மண்டேலா, 2013-ம் ஆண்டு தனது 95-வதுவயதில் காலமானார்.


Add new comment

Or log in with...