நாட்டின் வன வளத்தை பாதுகாப்பதன் அவசியம் | தினகரன்

நாட்டின் வன வளத்தை பாதுகாப்பதன் அவசியம்

உலகெங்கிலும் வனவளம் மிக வேகமாகக் குறைவடைந்து வருகின்றது. குறிப்பாக 20 ஆம் நூற்றாண்டின் பின்னர் காடழிப்பு மிகவும் வேகமடைந்ததே இதற்கான அடிப்படைக் காரணமாகும். அதாவது நகராக்கல் மற்றும் கைத்தொழில் மயமாக்கலில் காடழித்தல் பிரதான இடத்தைப் பெற்றுள்ளது. அத்தோடு மனிதனின் தவறானதும் பிழையானதுமான நடவடிக்கைகளும் வனவளம் துரிதமாகக் குறைவடைவதற்கு பெரும் பங்களித்து-ள்ளன.

இதன் விளைவாக உலகலாவிய ரீதியில் பல்வேறு விதமான சுற்றுச்சூழல் பிரச்சினைகளும் பாதிப்புக்களும் தோற்றம் பெற்றுள்ளன. அவற்றில் புவி வெப்பமடைதல், பாலைவனமாதல், காலநிலை மாற்றம், மழைவீழ்ச்சி போக்கில் மாற்றம் என்பன குறிப்பிடத்தக்க விடயங்களாகும்.

காடழிப்பும் அதன் விளைவாக ஏற்பட்டு வருகின்ற வனவளக் குறைவும் தோற்றுவித்துள்ள தாக்கங்களும் பாதிப்புக்களும் உலகின் எல்லா மட்டங்களதும் அவதானத்திற்கு உள்ளாகியுள்ளன. அந்தடிப்படையில் வனவளத்தைப் பாதுகாத்து மேம்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து அதிக கவனம் செலுத்தப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதன் நிமித்தம் பல்வேறு திட்டங்களும் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

அந்த வகையில் காடுகளின் முக்கியத்துவம் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவற்றை பாதுகாப்பதையும், மேம்படுத்துவதையும் நோக்காகக் கொண்டு பல்வேறு வேலைத்திட்டங்கள் உலகெங்கிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் நிமித்தம் சர்வதேச, பிராந்திய மற்றும் நாடுகள் மட்டத்திலும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அந்தளவுக்கு வனவளத்தின் மு-க்கியத்துவம் உணரப்பட்டுள்ளது.

இவ்விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் விவசாய உணவு அமைப்பு அதிக கவனம் செலுத்தி நடவடிக்கைகளைமுன்னெடுத்து வருகின்றது. இதன் நிமித்தம் பிராந்திய மற்றும் சர்வதேச மட்ட மாநாடுகள் மாத்திரமல்லாமல் அரச தலைவர்களுக்கான மாநாடுகளும் நடாத்தப்படுகின்றன.

அந்த வகையில் உணவு மற்றும் விவசாய அமைப்பின் உலக வனப் பாதுகாப்பு குழுவின் 24 வது கூட்டத்தொடர் இவ்வாரம் இத்தாலியின் தலைநகர் ரோமில் ஆரம்பமானது. இம்மாநாட்டில் இலங்கைகை​ையப் பிரதிநிதித்துவப்படுத்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டார். அவர் இம்மாநாட்டில் ஆற்றிய உரையின் போது வனவளத்தின் முக்கியத்துவத்தையும் சிறப்பையும் எடுத்து-க் கூறியதோடு வனவளத்தைப் பாதுகாத்து மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் நடைமுறைச்சாத்தியமான முறையில் எடுத்துக் கூறினார். இம்மாநாட்டில் வனவளப் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு குறித்து இலங்கை ஜனாதிபதி முன்வைத்த கருத்துகள் மாநாட்டில் பங்குபற்றிய உலகத் தலைவர்களதும் பிரதிநிதிகளதும் கவனத்தை ஈர்த்தன.

'அடுத்து வரும் ஒன்றரை வருட காலப்பகுதிக்குள் அதாவது 2020 ஆம் ஆண்டுக்குள் ஐம்பது இலட்சம் மரக்கன்றுகளை நடுவதற்கு தாம் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும், கடல் மட்டத்திலிருந்து ஐயாயிரம் அடிகள் உயரத்திலுள்ள பகுதிகளில் மரங்களை வெட்டுவதைத் தடை செய்யப் போவதாகவும் இம்மாநாட்டில் ஆற்றிய உரையின் போது ஜனாதிபதி குறிப்பிட்டார். நாட்டில் 43 இலட்சம் பாடசாலை மாணவர்கள் உள்ளனர். அவர்கள் ஊடாக மாணவருக்கு ஒரு மரக்கன்றாவது என்ற அடிப்படையில் மரநடுகையை ஊக்குவிக்க இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உண்மையில் வனவள மேம்பாட்டு குறித்து உலகலாவிய ரீதியில் கவனம் செலுத்தப்பட்டு வரும் இச்சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியின் இவ்வறிப்பு பெரிதும் வரவேற்கத்தக்கதும் பாராட்டத்தக்கதுமாகும்.

ஏனெனில் காடழிப்பு காரணமாக உலக நாடுகள் மு-கம் கொடுக்கும் பல்வேறு பிரச்சினைகளின் தாக்கங்களுக்கு இலங்கையும் முகம் கொடுத்து வருகின்றது. இலங்கை ஒரு தீவு என்ற போதிலும் இது பல்வேறு வகையான மரஞ்செடி கொடிகளைத் தன்னகத்தே கொண்ட ஒரு பசுமை தேசம். இருந்தும் ஏனைய நாடுகள், பிராந்தியங்களைப் போன்று இங்கும் மனிதனின் தவறானதும் பிழையானதுமான நடவடிக்கைகளால் வனவளம் பெரிதும் குறைவடைந்துள்ளது.

அதாவது சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் நாட்டின் மொத்த நிலப்பரப்பில் ஐம்பது வீதமாகக் காணப்பட்ட வன வளம் தற்போது 29.7 வீதம் வரைக் குறைவடைந்துள்ளது. அத்தோடு நாட்டில் சில பிரதேசங்களில் தொடர்ந்தும் முறையற்ற காட்ழிப்புகள் தொடர்ந்த வண்ணமுள்ளன. உலகிலும் இலங்கையிலும் இடம்பெற்று வருகின்ற முறையற்ற வனவள அழிப்பு காரணமாக இந்நாட்டிலும் மழைவீழ்ச்சி போக்கிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அத்தோடு- மண்ணரிப்பு, விவசாய பயிர்ச்செய்கை அழிவுக்களுக்கும் அவை துணை புரிந்துள்ளன.

ஆனால் மனிதனின் அடிப்படைத் தேவைகளாக விளங்கும் உணவு, சக்தி வளம், சமூக பொருளாதார நன்மைகைள வனவளம் அளித்து வருவதை கருத்தில் கொள்ளாததன் விளைவாகவே இவ்வாறான பாதிப்புகளுக்கு முகம் கொடுக்க நேர்ந்துள்ளது. அதனால் இந்நன்மைகளை அடைந்து கொள்ளவென உதவுகின்ற உற்பத்தி மற்றும் சேவைகளைப் பேணவென வனவளத்தை நிலைபேறானதாகப் பாதுகாக்க வேண்டும். வன வளம் பாதுகாக்கப்படும் போது தான் மனித ஆரோக்கியத்திற்கும் அவனது இருப்புக்கும் அச்சுறுத்தல் இல்லாத சூழலை பேணிப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

ஆகவே வனவளத்தைப் பாதுகாக்கவும் முறையற்ற காடழிப்பை கட்டுப்படுத்தவும் முன்னெடுக்கப்படுகின்ற வேலைத் திட்டங்களுக்கு ஒத்துழைப்புகள் அளிக்கப்படுவது மிகவும் அவசியம். அதேநேரம் இந்த மண்ணின் மீது உண்மையான பற்று கொண்டுள்ள ஒவ்வொருவரும் ஒரு மரத்தையாவது நட்டி வளர்த்து தேசத்திற்கும் முழு உலக மக்களுக்கும் நன்மை அளிக்க முன் வர வேண்டும். அதில் அதிக கவனம் செலுத்துவது காலத்தின் அவசியத்தேவையாகும்.


Add new comment

Or log in with...