கோட்டை ரயில் நிலையத்தை மேலும் மெருகூட்டும் பெஷன் பக் | தினகரன்

கோட்டை ரயில் நிலையத்தை மேலும் மெருகூட்டும் பெஷன் பக்

கோட்டை ரயில் நிலையத்தை மேலும் மெருகூட்டும் பெஷன் பக்-Fashion Bug continues to brighten Fort Railway Station
Amith Chandana - Marketing Executive of Fashion Bug, Samadhi Abeysinghe - Marketing Manager of Fashion Bug, Champika Nanayakkara Station Master of Coastal Line, Sri Lanka Railways

 

நீண்டகால கூட்டு சமூகப் பொறுப்பு செயற்பாட்டின் மூன்றாம் கட்டம் பூர்த்தி

சமூகப் பொறுப்புமிக்க நிறுவனம் ஒன்றாக எப்போதும் புகழ்பெற்றுள்ள இலங்கையின் முன்னணி ஆடை விற்பனை நிறுவனமான பெஷன் பக், கோட்டை ரயில் நிலையத்தின் புனர்நிர்மாணப் பணிகளின் மூன்றாம் கட்டப் பணிகளைப் பூர்த்தி செய்துள்ளது.

இந்த திட்டத்தின் அடிப்படையில் சகல சமிக்ஞை மற்றும் வழிகாட்டல் சாதனங்களும் புனரமைக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்;டுள்ளன.

இலங்கை ரயில்வே திணைக்களத்தின் கோரிக்கைகளுக்கு இணங்க, 2013 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழும சமூகப் பொறுப்பு நடவடிக்கைகள், நீண்டகாலமாக செயற்பட்டு வந்துள்ளன.

பெஷன் பக், கடந்த ஐந்து வருடங்களாக சமிக்ஞைக் கருவிகளின் தரத்தைப் பேணிவருவதில் கவனம் செலுத்தி வந்துள்ளமை புகையிரதப் போக்குவரத்தில் அன்றாடம் பயன்பெறும் மக்களுக்கு பெரும் துணையாக அமைந்திருந்தது.

நாட்டில் மிகவும் சுறுசுறுப்பு மிக்க செயற்பாடு கொண்ட கோட்டை ரயில் நிலையமானது, நாளாந்தம் ஆயிரக்கணக்கான பயணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்து வருகிறது. குறுகிய மற்றும் நீண்ட தூர பயணங்களில் ஈடுபடுவோருக்கு இதுவொரு முக்கிய தளமாகக் கருதப்படுகின்றது.

சுற்றுலாப் பயணிகளிடையே பொதுப் போக்குவரத்துச் சேவைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளமை மற்றும் உள்நாட்டுத் தன்மையை உணரும் தேவைப்பாடு என்பன காரணமாக, பெருந்தொகையான வெளிநாட்டுப் பயணிகளும் ரயில் போக்குவரத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதனால், துல்லியமான, சரியான சமிக்ஞைக் கருவிகள் இவ்வாறான ஒரு முக்கிய ரயில் நிலையத்தின் அத்தியாவசியத் தேவையாக காணப்படுகின்றது.

இறுதிக்கட்ட நடவடிக்கைகளைப் பூர்த்தி செய்துள்ளமை பற்றி கருத்துத் தெரிவித்த பெஷன் பக் நிறுவனத்தின் பணிப்பாளர் திரு. சபீர் சுபைன், 'பெஷன் பக் நிறுவனம், சமூகப் பொறுப்பு என்பதை சகல செயற்பாடுகளிலும் முக்கியமாகக் கருதுகின்றது.

அதனால், பெருந்தொகை நிதியை பல்வேறு குழும சமூகப் பொறுப்பு நடவடிக்கைகளில் நாம் செலவிட்டு வருகின்றோம். கோட்டை ரயில் நிலையத்தின் சமிக்ஞைக் கருவிகளின் புனரமைப்பு எமது நீண்டகால செயற்பாடுகளில் ஒன்றாகும். ரயில் பயணிகளின் வசதிகளை அதிகரித்துள்ளமை சம்பந்தமாக எம்மால் மகிழ்ச்சியடைய முடிகிறது.

தனியார் நிறுவனம் ஒன்று பொதுச் சேவைகளின் அபிவிருத்திக்காக செயற்படுவதன் மூலம் நாட்டின் பொருளாதாரமும் சமூகமும் ஒட்டுமொத்த வளர்ச்சியை அடைந்து கொள்கிறது” என்று கூறினார்.

பெஷன் பக் நிறுவனமானது. பல்வேறு துறைகளில் பலவிதமான சமூகப் பொறுப்பு செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இவற்றில் விளையாட்டு, கல்வி, சுகாதாரம், மற்றும் பொதுச் சேவைகள் என்பன முக்கிய இடம்பெறுகின்றன.

விருதுபெற்ற சமூகப் பொறுப்பு செயற்பாட்டுத் திட்டமான ‘சிசு திரிமக’ திட்டத்தின் மூலம் கல்வி நடவடிக்கைகளுக்கான புலமைப் பரிசில்களைப் பெற்றுக்கொடுக்கும் திட்டம் ஒன்று செயற்பட்டு வருகின்றது. ஆரம்பம் முதல் இதுவரை 14,000 க்கும் அதிகமான மாணவர்கள் இதன்மூலம் நன்மையடைந்துள்ளனர்.

‘சிசு திரிமக’ திட்டத்தின் மூலம் வருடாந்த சித்திரப் போட்டி “ரூ சித்தம்” என்பன இடம்பெறுகிறது. இதன் மூலம், இளம் சந்ததியினரின் ஆக்கபூர்வமான திறமைகள் வெளிக் கொண்டுவரப்படுவதோடு, நாடளாவிய ரீதியில் 60,000 க்கும் மேற்பட்ட ஆக்கங்கள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றன.

ரயில் திணைக்களத்தைத் தவிர தபால் மற்றும் சுகாதார சேவைகளிலும் பல்வேறு புனர்நிர்மாணத் திட்டங்களை நிறுவனம் மேற்கொண்டுள்ளது. ‘வாழ்க்கையில் மாறும் மாற்றங்கள்’ என்ற அவர்களின் தொலைநோக்கு பல்வேறு வழிகளிலும் நடைமுறைக்கு புதுவடிவம் தரும்.

பெஷன் பக் பற்றி
பெஷன் பக் நிறுவனம், 1994 ஆம் ஆண்டில் பண்டாரவளை நகரில் 07 பேர்கள் கொண்ட குழுவினால் ஆரம்பிக்கப்பட்டது. அக்காலத்தில், பண்டாரவளை நகரில் 300 சதுர அடி பரப்பில் அமைக்கப்பட்ட முதலாவது விற்பனை நிலையம் இதுவாகும்.

தற்போதைய நிலையில், நாடளாவிய ரீதியில் 16 கிளைகளைக் கொண்ட பிரசித்தி பெற்ற ஒரு நிறுவனமாக அது வளர்ச்சியடைந்துள்ளது. ஆடவர், மகளிர் மற்றும் சிறுவர்களுக்கான ஆடைகள், லினன் வகைகள் என்பன அனைத்து காட்சியறைகளிலும் காணப்படுகிறது.

மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய நாகரிகங்களுக்குரிய ஆடைகளும் இங்கு விற்பனைக்குள்ளன. டிசைனர் சாரி வகைகள், குர்த்திகள் மற்றும் சல்வார்கள், ஏனைய நாகரிக உற்பத்திகள், ஹேன்-பேக்குகள், பாதணிகள் போன்ற பலவற்றையும், வண்ணமயமான காட்சியறைகளில் அனைவருக்கும் எற்ற வகையில் நிறுவனம் கொண்டுள்ளது. தனது சொந்த வர்த்தகப் பெயளர்களான Givo, அமேஸிங் லங்கா, Hush, Jobbs, Bigg Boss, Amy மற்றும் பக் ஜுனியர் ஆகிய உற்பத்திகளுடன், சர்வதேச வர்த்தகப் பெயர்களான டிஸ்னி, குரொக்கடைல், Triumph, பூமா மற்றும் USPA ஆகியவற்றுடன் மேலும் பல உற்பத்திகளையும் காட்சியறைகள் கொண்டுள்ளன.
 


Add new comment

Or log in with...