பிரதேச செயலக ஊழியர் கொடூரமாக கொலை | தினகரன்


பிரதேச செயலக ஊழியர் கொடூரமாக கொலை

பிரதேச செயலக ஊழியர் கொடூரமாக கொலை-Dodangoda DS Office Murder-Horana, Anguruwatota, Werawatta

 

ஹொரணை, அங்குருவதொட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற கொலை சம்பவத்தில் 35 வயதான நபர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

இன்று (16) அதிகாலை 3.50 மணியளவில் யாலஹந்திய, வேரவத்தை பிரதேசத்திலுள்ள தங்குமிடமொன்றில் வைத்து குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொலை செய்யப்பட்ட உபுல் ரஞ்சித் (35) கொஸ்ஹேன, பொம்புவல பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும், குறித்த தங்குமிடத்தில் கடந்த 06 மாதங்களாக தங்கியிருந்த வந்துள்ளதோடு, தொடங்கொட பிரதேச செயலக அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக பணிபுரிந்து வந்துள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இனம்தெரியாத நபர்களால் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

சடலம் தற்போது ஹொரணை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

கொலைக்கான காரணமோ அல்லது சந்தேகநபர்கள் தொடர்பிலோ இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை எனவும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அங்குருவாதொட்ட பொலிசார் தெரிவித்துள்ளனர்.

 


Add new comment

Or log in with...