Friday, March 29, 2024
Home » அஸ்வெசும நிவாரணத் திட்டம் நிதி ஒதுக்கீடு மேலும் அதிகரிப்பு!

அஸ்வெசும நிவாரணத் திட்டம் நிதி ஒதுக்கீடு மேலும் அதிகரிப்பு!

பட்ஜட்டில் ரூபா,123 பில்லியன் மேலதிகம்

by damith
November 21, 2023 7:50 am 0 comment

அஸ்வெசும நிவாரணத் திட்டத்திற்காக இதுவரை 60 பில்லியன் ஒதுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில்,இவ்வருடம் முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்தில் இது 183 பில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் பல சாதகமான விடயங்கள் உள்ளதாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்கும் போது, ​​ஜனாதிபதி ரணிலால் இதனைச் செய்ய முடியாது என எதிர்க்கட்சிகள் தெரிவித்தன. நான், சொன்னது போன்று காகத்தின் கூட்டில் குயில் முட்டையிடுவது போன்ற கதைகளையே சொல்லித்திரிந்தனர்.

ஆனால், இதுவரை 70% ஆக இருந்த பணவீக்கம் 1.3% ஆக குறைந்துள்ளது. பூஜ்ஜியமாக சரிந்திருந்த டொலர் கையிருப்பு 3530 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

2023 இன், முதல் ஒன்பது மாதங்களில், குறிப்பிடத்தக்க முதன்மை உபரியான 123.8 பில்லியன்களை அடைய முடிந்தது.30% ஆக இருந்த வட்டி வீதம் தற்போது 15 சதவீதமாக குறைந்துள்ளது. மின்சாரம் தொடர்ந்து கிடைக்கிறது. எரிவாயு உள்ளது. தொடர்ச்சியான எரிபொருள் விநியோகம் கிடைக்கிறது. உரப் பிரச்சினை இப்போது இல்லை.

எனவே, 2024ஆம் ஆண்டின் காலாண்டில் சாதகமான பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியும் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் 10,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. விமர்சனம் இருக்கலாம். ஓய்வூதிய கொடுப்பனவு 2500 ரூபா அதிகரிக்கப்பட்டது.

மாற்றுத்திறனாளி, சிறுநீரக நோயாளர் கொடுப்பனவு 7500ஆல் அதிகரிக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவு 3000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அண்மைய நாட்களில் எனது அமைச்சு தொடர்பில் பல விடயங்கள் பேசப்பட்டுள்ளன. எங்கள் விடயத்தில் அவர்களுக்கு பதிலளிப்பேன் என்று நான் நம்புகிறேன். ஏனெனில் கடந்த முறை அறிவித்தபடி, அடுக்குமாடி வீட்டுத் திட்டத்தை செயல்படுத்தவுள்ளோம். அதே சமயம், சட்டச் சிக்கல்களும் தீர்க்கப்பட வேண்டும். ரணசிங்க பிரேமதாச வழங்கிய காணிகள் இதுவரை கைமாற்றப்படவில்லை.

அந்த ஒதுக்கப்படாத நிலங்களில் உரிமைப் பத்திரம் கொடுக்க முடியாது. இந்த வீட்டு வளாகங்களில் உள்ள நிலம் ஒப்படைக்கப்படவில்லை.

அதற்கான சட்டப் பின்னணியை உருவாக்குவதன் மூலம் மட்டுமே இதைச் செய்ய முடியும்.

கடந்த வருடம் அதைச் சரியாகச் செய்ததால்தான் ஜனாதிபதி அச்சமின்றி இவ்வருடமும் செய்வோம் என்றார். 50,000 வீடுகள் இருக்கிறதா என்று கேட்டதற்கு, அதற்கும் மேல் இருக்கிறது என்றேன்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT