29 தங்க கட்டிகளுடன் இலங்கையர் இருவர் கைது | தினகரன்

29 தங்க கட்டிகளுடன் இலங்கையர் இருவர் கைது

29 தங்க கட்டிகளுடன் இலங்கையர் இருவர் கைது-Gold Seized at Airport-2 Arrested

 

2.9 கிலோ கிராம்; ரூபா ஒரு கோடியே 88 இலட்சத்து 50 ஆயிரம் பெறுமதி

துபாயிலிருந்து இலங்கை வந்த இருவரிடமிருந்து 29 தங்கக்கட்டிகள் மீட்கப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்று (16) காலை துபாயிலிருந்து கட்டுநாயக்கா விமான நிலையம் வந்த விமானத்தில் வந்த குறித்த இருவரிடமிருந்தும் 100 கிராம் கொண்ட 29 தங்க பிஸ்கட்டுகளை மீட்டுள்ளதாக சுங்க திணைக்களத்தின் விமான நிலைய பணிப்பாளர் ஓ.எம். ஜபீர் தெரிவித்தார்.

29 தங்க கட்டிகளுடன் இலங்கையர் இருவர் கைது-Gold Seized at Airport-2 Arrested

குறித்த இருவரும் 33 மற்றும் 43 வயதுடைய, மன்னார் மற்றும் கொழும்பு பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும், விமான நிலைய பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே அவர்களிடமிருந்து தங்க கட்டிகள் மீட்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

29 தங்க கட்டிகளுடன் இலங்கையர் இருவர் கைது-Gold Seized at Airport-2 Arrested

குறித்த தங்கத்தின் பெறுமதி ரூபா ஒரு கோடியே 88 இலட்சத்து 50 ஆயிரம் (ரூ. 18,850,000) என மதிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சுங்க திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

 


Add new comment

Or log in with...