காணாமல் போனோர் தொடர்பில் உடனடித் தீர்வு என்பது பொய்யான வாக்குறுதி | தினகரன்

காணாமல் போனோர் தொடர்பில் உடனடித் தீர்வு என்பது பொய்யான வாக்குறுதி

காணாமல் போனோர் தொடர்பில் உடனடித் தீர்வு என்பது பொய்யான வாக்குறுதி-Office of Missing Person-Protest-Saliya Peiris

 

காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ்
  • உறவினர்கள் அலுவலகம் முன் போராட்டம்

காணாமல் போனோர் அலுவலகம் வேண்டாம், அலுவலகத்தினை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என, காணாமல் போனோரின் உறவுகள் யாழில் போராட்டத்தினை முன்னெடுத்தார்கள்.

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று (14) காலை, காணாமல் போனோர்களின் அலுவலகத்தின் அமர்வு நடைபெற்றது.

இந்த அமர்வில் கலந்துகொண்ட வடமாகாணத்தில் காணாமல் போனோரின் உறவுகளில் சில காணாமல் போனோர்களின் உறவுகள் போராட்டத்தினை முன்னெடுத்தார்கள்.

காணாமல் போனோர் தொடர்பில் உடனடித் தீர்வு என்பது பொய்யான வாக்குறுதி-Office of Missing Person-Protest-Saliya Peiris

வீரசிங்கம் மண்டபத்தின் முன்பாக ஒன்று கூடிய காணாமல்போனோர் உறவினர்கள், கடந்த 09 வருடங்களாக எமது உறவுகளை இழந்து பல ஆணைக்குழுக்களை நாடியும் எந்த ஆணைக்குழுவும் இதுவரையில் தமக்கான நீதியைப் பெற்றுத் தரவில்லை. ஆகையால், தமது உறவுகளிற்கான நீதி தருவதாக இருந்தால், இன்றைய தினமே நீதியை வழங்குமாறும் வலியுறுத்தியுள்ளனர்.

இதன்போது, காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் காணாமல் போனோரின் உறவுகளுடன் கலந்துரையாடினார்.

அவரின் கருத்துக்களை கூட செவிமடுக்காத அவர்கள், அமர்வு நடைபெற்ற வீரசிங்கம் மண்டபத்திற்குள் நுழைந்து, காணாமல்போனோரின் உறவுகள் எவரையும் அமர்வில் கலந்துகொள்ள வேண்டாமென்றும், தமது பிள்ளைகளுக்கான நீதியை இன்றே பெற்றுத் தருமாறும் கதறி அழுது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பல ஆணைக்குழுக்கள் தமக்கான நீதியைப் பெற்றுத் தருவதாக கூறி எம்மை ஏமாற்றி விட்டதுடன், காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் இராணுவத்தில் சரணடைந்த தமது உறவுகளை தங்களிடம் ஒப்படைக்குமாறும் வேண்டுகோள்விடுத்ததுடன், காணாமல் போனோர் அலுவலகத்திற்கு எதிராக பல கோசங்களை எழுப்பியவாறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காணாமல் போனோர் தொடர்பில் உடனடித் தீர்வு என்பது பொய்யான வாக்குறுதி-Office of Missing Person-Protest-Saliya Peiris

உடனடித் தீர்வு என்ற பொய்யான வாக்குறுதி தரமாட்டேன். காணாமல் போனோரைக் கண்டு பிடிப்பதென்பது சிக்கலான விடயம் என காணாமல்போனோர் அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்தார்.

குறித்த அமர்வின் போது, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்த பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

காணாமல் போனோரைக் கண்டு பிடிப்பதென்பது மிகவும் சிக்கலான விடயம் ஆனால் உங்களுக்குப் பொய்யான வாக்குறுதி தந்து ஏமாற்றமாட்டேன். காணாமல் போனோர் தொடர்பாக  பக்கச்சார்பற்ற, சுயாதீனமான விசாரணைகளை நடாத்துவோம். பிரதேச காரியங்களை உங்களிடம் இருக்கும் தகவல்களை உத்தியோகத்தர்களிடம் வழங்கி ஆதரவு வழங்குமாறும்  கோரிக்கை விடுத்தார்.

காணாமல் போனோரின் அலுவலக காரியாலயங்கள் வடக்கில் 05 கிளைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. அந்த 05 கிளைகளின் ஊடாக காணாமல் ஆக்கப்பட்டோரின் விடயங்கள் ஆராயப்பட்டு உரிய தீர்வுகள் வழங்கப்படும்.

காணாமல் போனோர் தொடர்பில் உடனடித் தீர்வு என்பது பொய்யான வாக்குறுதி-Office of Missing Person-Protest-Saliya Peiris

அதேவேளை, காணாமல் ஆக்கப்பட்ட உங்களின் உறவுகள், கணவன் மற்றும் பிள்ளைகளை இழந்து நீங்கள் படும் வேதனைகளை நான் நன்கு அறிவேன், எனது விடயங்களை நீங்கள் செவிமடுக்க வேண்டுமென்பதுடன், உங்களின் பிரச்சினைகளை எனக்குத் தெரியப்படுத்துங்கள். ஆயினும் நான், உங்கள் உறவுகளை நிச்சயம் தேடித் தருவேன் என்ற பொய்யான வாக்குறுதிகளை வழங்க மாட்டேன்.

ஆனால் இந்த காணாமல் போனோர் அலுவலகத்தின் ஊடாக நீதியான விசாரணைகளை முன்னெடுத்து, உங்களுக்கு ஏற்ற நீதியைப் பெற்றுத் தருவேன்.

கணவன் மற்றும் பிள்ளைகளை இழந்த உங்களுக்குப் பாரிய பொருளாதார பிரச்சினைகள் இருப்பதென்பதை நான் அறிவேன். உங்களுக்கான நிவாரணங்கள் கிடைக்கவில்லை என்பதனையும் நான் அறிவேன்.

பொருளாதார மற்றும் நிவாரணங்கள் கிடைக்காத குடும்பங்களின் நலன்கள் கருதி உரிய முன்மொழிவுகளை அரசாங்கத்திற்கு அறிக்கைகள் முன்வைக்கவுள்ளோம்.

உங்களின் பிரச்சினைகளை நான் நன்கு அறிவேன். ஊங்களுக்குத் தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டுமென்பதே எனது விருப்பம். ஆனால், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயம் பாரிய சிக்கலான விடயம் என்பதனர், பாராபட்சமன்றிய, நீதியான விசாரணைகளை முன்னெடுத்து உங்களுக்கான தீர்வினை பெற்றுத் தருவேன் என உறுதியளிக்கின்றேன் என்றார்.

(யாழ்ப்பாணம் குறூப் நிருபர் - சுமித்தி தங்கராசா)

 


Add new comment

Or log in with...