1st Test - SLvSA: தென்னாபிரிக்கா முதல் இன்னிங்ஸில் 126 ஓட்டங்கள் | தினகரன்

1st Test - SLvSA: தென்னாபிரிக்கா முதல் இன்னிங்ஸில் 126 ஓட்டங்கள்

1st Test - SLvSA: தென்னாபிரிக்கா முதல் இன்னிங்ஸில் 126 ஓட்டங்கள்-1st Test Day 02 Dimuth Half Century

 

இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையில், காலியில் இடம்பெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்கா அணி 126 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்துள்ளது.

இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தை ஒரு விக்கெட் இழப்பிற்கு 4 ஓட்டங்கள் என ஆரம்பித்த தென்னாபிரிக்க அணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 126 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

தென்னாபிரிக்க அணி சார்பில் ஆகக் கூடுதலாக டு பிளசிஸ் 49 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் ரங்கன தில்ருவன் பெரேரா 46 ஓட்டங்களை கொடுத்து 4 விக்கெட்டுகளையும், சுரங்க லக்மால் 21 ஓட்டங்களை கொடுத்து 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

ஏற்கனவே தனது முதல் இன்னிங்ஸிற்காக 287 ஓட்டங்களை பெற்ற இலங்கை அணி, தென்னாபிரிக்க அணியை விட 161 ஓட்டங்கள் முன்னலை வகிக்கின்றது.

அந்த வகையில் பதிலுக்கு தனது இரண்டாம் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி, தற்போது வரை 3 விக்கெட் இழப்பிற்கு 78 ஓட்டங்களை பெற்றுள்ளது.

முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழக்காது 158 ஓட்டங்களை பெற்ற திமுத் கருணாரத்ன, ஆட்டமிழக்காது அரைச் சதத்தை பூர்த்தி செய்துள்ளதோடு, அஞ்சலோ மெத்திவ்ஸ் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழக்காது ஆடி வருகிறார்.

 


Add new comment

Or log in with...