இலங்கை அணி 287 ஓட்டங்கள் | தினகரன்


இலங்கை அணி 287 ஓட்டங்கள்

 

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில் இலங்கை அணி 287 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்துள்ளது.

இலங்கை அணி சார்பாக திமுத் கருணாரத்ன ஆட்டமிழக்காமல் 158 ஓட்டங்களையும், தனுஷ்க குணதிலக 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.இந்த சதம் கருணாரத்தன பெற்ற 8 ஆவது சதமாகும்.தென்னாபிரிக்க அணி சார்பாக பந்து வீச்சில் ரபாடா 4 விக்கெட்டையும் சம்ஷி 3 விக்கெட்டையும் பிலான்டர்,ஸ்டெயின் தலா ஒரு விக்கெட்டையும் பதம் பார்த்தனர். இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலியில் நேற்று ஆரம்பமானது. நாணயச் சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து களமிறங்கியது.

இதன்படி தென்னாபிரிக்க அணி தனது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுதாடிய அவ்வணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் நான்கு ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்தது.அவ்வணி சார்பாக ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய எல்கர் நான்கு ஓட்டதுடனும் மார்ஹம் ஓட்டம் எதுவும் பெறாமல் ஆட்டமிழந்தார் .இன்று போட்டியின் இரண்டாம் நாளாகும்.


Add new comment

Or log in with...