Home » நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு எதிரணியும் ஜே.வி.பியுமே காரணம்

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு எதிரணியும் ஜே.வி.பியுமே காரணம்

நாமல் ராஜபக்‌ஷ எம்.பி தெரிவிப்பு

by damith
November 21, 2023 6:10 am 0 comment

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு எதிர்க்கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியும் பொறுப்பு கூற வேண்டுமென, சிறிலங்கா பொதுஜன பெரமுன வலியுறுத்தியுள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஆட்சி காலத்தில் வரிகளை குறைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்கு, இத்தரப்பினர் ஆதரவு தெரிவித்திருந்ததாகவும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதுபற்றி மேலும் கருத்து தெரிவித்த நாமல்ராஜபக்‌ஷ: தமது கட்சி உறுப்பினர்கள் மாத்திரமின்றி ஐக்கிய மக்கள் சக்தியும் தேசிய மக்கள் சக்தியும் நாட்டின் பொருளாாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்க வேண்டும். நாட்டில்,2015 இல் நடைபெற்ற ன் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்க்ஷ தோல்வியடைந்தார்.அந்த நேரத்தில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 வீதமாக பதிவாகியிருந்தது. இந்நிலையில், 2020 ஆம் ஆண்டளவில் பொருளாதார வளர்ச்சி ஏழு வீதத்திலிருந்து இரண்டு வீதாமாக குறைவடைந்திருந்தது. இவ்வாறாக, நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதம் குறைவடைந்தமைக்கு ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகியன பொறுப்புக் கூற வேண்டும்.இந்நிலையிலேயே, 2019 இல், ஜனாதிபதியாக பதவியேற்ற கோட்டபாய ராஜபக்க்ஷ தமது கட்சியின் கொள்கைகளுக்கு ஏற்ப, வரிகளை குறைத்திருந்தார். எனவே, மக்கள் ஆணை மூலம் தெரிவான கோட்டபாய ராஜபக்க்ஷ வரிகளை குறைக்க நடவடிக்கை எடுத்தமை பொருளாதார நெருக்கடிக்கு காரணமென கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. எதிர்க்கட்சியினர் எந்த அடிப்படையில் கோட்டாபயவின் ஆட்சிக் காலத்தை தவறான முறையில் வெளிக்காட்ட முயற்சிப்பதாகவும் அவர் மேலும் கேள்வி எழுப்பினார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT