Home » பனங்காடு வைத்தியசாலை பொதுமக்கள் உதவியோடு முன்னேற்றமடைந்துள்ளது
கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் புகழாரம்

பனங்காடு வைத்தியசாலை பொதுமக்கள் உதவியோடு முன்னேற்றமடைந்துள்ளது

by damith
November 21, 2023 10:02 am 0 comment

பொதுமக்களின் பங்களிப்புடன் வளர்ச்சி அடைந்து வரும் வைத்தியசாலைகளில் பனங்காடு பிரதேச வைத்தியசாலை கிழக்கு மாகாணத்தில் முதல் நிலை பெறுகின்றது. இவ்வைத்தியசாலையினை பொதுச்சொத்தாக கருதி பொதுமக்கள் செயற்படுவதானாலேயே இன்று இந்நிலை அடைந்துள்ளதென கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மகிழ்ச்சி தெரிவித்தார்.

பனங்காடு பிரதேச வைத்தியசாலையில் நேற்று முன்தினம் (19) இடம்பெற்ற பொதுமக்களின் நிதிப்பங்களிப்பில் நிர்மாணிக்கப்பட்ட நுழைவாயில் மற்றும் அரச நிதியில் நிர்மாணிக்கப்பட்ட மேல் மாடிக்கட்டட திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், பனங்காடு பிரதேச வைத்தியசாலையானது மிகவும் அபரிமித வளர்ச்சி அடைந்து வருகின்றது. இதற்கு பிரதான காரணம் இங்கு வாழும் மக்கள். இதனை அவர்களது சொத்தாக நினைத்து செயற்படுவதே. இவ்வாறு அனைவரும் அரச சொத்துக்களை பொதுச்சொத்தாக நினைத்து நடந்து கொண்டால் அக்கிராமங்களின் வளர்ச்சி சிறப்பாக அமையும் என கூறினார்.

மேலும் வைத்தியசாலையின் ஆளணி உள்ளிட்ட குறைபாடுகளும் விரைவில் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதிமொழி வழங்கினார்.

வைத்தியசாலைக்கு வருகை தந்த ஆளுநருக்கு வைத்தியர் குணாளினி சிவராஜ் தலைமையிலான வைத்தியர்கள், வைத்தியசாலை ஊழியர்கள், வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து மகத்தான வரவேற்பளித்தனர்.

இதன் பின்னராக வைத்தியசாலையின் நுழைவாயிலை சிறுவர்களின் கரங்களினால் ஆளுநர் திறந்து வைத்தார். தொடர்ந்து கட்டடத்திற்கான பெயர்பலகையினையும் திரைநீக்கம் செய்து வைத்தார்.

வாச்சிக்குடா விஷேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT