பாக். தேர்தல் பேரணியில் தாக்குதல்: 20 பேர் பலி | தினகரன்

பாக். தேர்தல் பேரணியில் தாக்குதல்: 20 பேர் பலி

வட மேற்கு பாகிஸ்தானில் தேர்தல் பேரணி ஒன்றின் மீது இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தலிபான்கள் பொறுப்பேற்றுள்ளனர். பெஷாவர் நகரில் இடம்பெற்ற இந்த தாக்குதலில் அவாமி தேசிய கட்சியின் உள்ளூர் தலைவர் ஒருவரும் கொல்லப்பட்டவர்களில் அடங்குகிறார்.

தலிபான்கள் போன்ற கடும்போக்கு அமைப்புகள் மீது விமர்சனங்கள் வெளியிட்டு வரும் அவாமி தேசிய கட்சி கடந்த காலங்களிலும் தாக்குதல்களுக்கு இலக்காகி உள்ளது. பாகிஸ்தானில் எதிர்வரும் ஜூலை 25 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் இந்த தேர்தலில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக பாகிஸ்தான் இராணுவம் எச்சரித்துள்ளது.

சுமார் 200 ஆதரவாளர் முன் உள்ளூர் தலைவரான ஹாரூன் பிலூர் உரையாற்றிக்கொண்டிருக்கும்போதே குண்டு வெடித்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


Add new comment

Or log in with...