நாவலடி மர்கஸ் அந்நூர் அரபுக்கல்லூரி மாணவர்கள் சாதனை | தினகரன்

நாவலடி மர்கஸ் அந்நூர் அரபுக்கல்லூரி மாணவர்கள் சாதனை

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட அரச மற்றும் தனியார் பாடசாலைகளுக்கிடையேயான பாரம்பரிய விளையாட்டு விழா அண்மையில் தியாவட்டவான் அறபா வித்தியாலய மைதானத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.

வார் ஓட்டம், சாக்கோட்டம், கபடி, கயிறிழுத்தல்மை முட்டி அடித்தல் ஆகிய 5போட்டிகளிலும் மொத்தமாக முதல் மூன்று போட்டிகளில் முதலாமிடத்தையும், மற்றைய இரண்டு போட்டிகளிலும் முறையே இரண்டாமிடங்களையும்,மூன்றாமிடங்களையும் நாவலடி மர்கஸ் அந்நூர் அரபுக்கல்லூரி மாணவர்கள் பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வின் அதிதியாக பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தரும், ஜம்இயது தஹ்வது இஸ்லாலமியாவின் கல்குடா பிரதேசத்து பொதுத்தலைவருமான அஷ்ஷெய்க் ஏ.எல்.பீர்முஹமட் (காஸிமி) கலந்து சிறப்பித்தார்.

வாழைச்சேனை விசேட நிருபர்


Add new comment

Or log in with...